நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க தேர்தல்.. டிரெண்டான பன்னீர் டிக்கா.. மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் என்னய்யா சம்பந்தம்?

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி பன்னீர் டிக்கா எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி பன்னீர் டிக்கா எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கானது. அதிபர் தேர்தலுக்கும் பன்னீர் டிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்ற குழப்பத்தில் இருப்பவர்கள், இந்தச் செய்தியைப் படித்தால் அதன் சுவாரஸ்யமான பின்னணி தெரிய வரும்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி இருக்கின்றன. தற்போதைய அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

டிரெண்டான பன்னீர் டிக்கா

டிரெண்டான பன்னீர் டிக்கா

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி பன்னீர் டிக்கா எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. அதற்கு காரணம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிலா ஜெயபால். இந்திய வம்சாவழி பெண்ணான இவர், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்காக பன்னீர் டிக்கா செய்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

பிடித்த உணவு

பிடித்த உணவு

தான் செய்த பன்னீர் டிக்காவின் போட்டோவை பதிவிட்டு, கமலா ஹாரிஸ்க்கு பிடிக்கும் என்பதற்காக இந்த பன்னீர் டிக்காவை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பன்னீர் டிக்காவை வைத்து பிரமிலாவை கலாய்க்க தொடங்கிவிட்டனர். 'உங்க ஊர்ல இது தான் பன்னீர் டிக்காவா' என ஏகத்துக்கும் பங்கம் செய்துவிட்டனர்.

குழம்பிய நெட்டிசன்கள்

குழம்பிய நெட்டிசன்கள்

இதனால் #PaneerTikka எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. ஆனால் இந்த ஹேஷ்டேக் திடீரென ஏன் டிரெண்டாகிறது என்பது புரியாமல் பலரும் குழம்பியது வேறு கதை. டிரம்பும், பைடனும் ஒரு பக்கம் கடுமையாக போட்டிப் போட்டுக்கொண்டிருக்க, நெட்டிசன்களோ பன்னீர் டிக்காவை வைத்து டிக்கிலோனா விளையாடி இருக்கிறார்கள்.

நேசமணி கதை

நேசமணி கதை

இப்படித்தான் கடந்த வருடம் யாரோ ஒருவர், ‘சுத்தியல் என்ன?' எனக் கேட்க, குறும்புக்கார இளைஞர் ஒருவர் ப்ரெண்ட்ஸ் பட நேசமணியை அதில் கோர்த்து விட்டு விட்டார். பிறகு இணையம் முழுவதும் நேசமணிக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டது. யார் நேசமணி எனத் தெரியாமல் பலர் கூகுளில் வலை வீசி தேடினர். இப்போதும் அதே போல் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் பன்னீர் டிக்கா டிரெண்டிங்காகி டிவிட்டரை கலகலக்க வைத்துள்ளது.

English summary
Paneer tikka started trending on Twitter after the Indian-American Congresswoman, Pramila Jayapal shared with her followers that the night before elections, she decided to make the ultimate comfort food in honour of Kamala Harris.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X