நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மர்ம விதைகள்.. அமெரிக்க மக்களுக்கு சீனாவிலிருந்து சென்ற பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஷாக் சம்பவம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் பலருக்கு திடீரென சீனாவில் இருந்து மர்ம பார்சல் ஒன்று வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குள் இருந்த விதைகளும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    CHINAவிலிருந்து சென்ற PARCEL! AMERICA மக்கள் SHOCK

    அமெரிக்கா சீனா இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியான வர்த்தக மோதல், ராணுவ ரீதியான தென் சீன கடல் எல்லை மோதல், கொரோனா காரணமாக ஏற்பட்ட சண்டை என்று நிறைய விஷயங்கள் இதற்கு பின்னணியில் இருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது அமெரிக்கவிற்கு சீனாவில் இருந்து மர்ம பார்சல்கள் சென்றதாக புகார்கள் உள்ளது. அமெரிக்க மக்கள் தங்களுக்கு மர்ம பார்சல் வந்ததாக கூறியுள்ளனர்.

    தமிழகம் இப்போ இருக்கும் சூழ்நிலையில் இ பாஸ் ரூல்ஸ் அவசியமா?தமிழகம் இப்போ இருக்கும் சூழ்நிலையில் இ பாஸ் ரூல்ஸ் அவசியமா?

    அதிரடி புகார்

    அதிரடி புகார்

    அமெரிக்க மக்கள் வைக்கும் புகார் இதுதான். பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏலக்காய் போன்ற விதைகள் பார்சலில் வந்து இருக்கிறது. அதில், இதை உங்கள் வீட்டு தோட்டத்தில் புதைத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் ஆர்டர் செய்யவில்லை. எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

    பல மாகாணம்

    பல மாகாணம்

    ஒரு மாகாணம் மட்டுமின்றி பல மாகாணத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த பார்சல் வந்துள்ளதது. எல்லோருக்கும் ஒரே விதைகள் கொண்ட பார்சல்கள் வந்து இருக்கிறது. எதிலுமே அனுப்பிய நபர்களின் விலாசம் இல்லை. இதை தற்போது அமெரிக்க எப்பிஐ போலீஸ் விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்து வருகிறது.

    சீனா

    சீனா

    இந்த பார்சல்கள் சீனாவில் இருந்து வந்து இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதை யார் அனுப்பினார்கள் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. இதை உங்கள் நிலத்தில் புதைக்க வேண்டாம். இப்படி பார்சல் வந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விசாரணை செய்து வருகிறது

    விசாரணை செய்து வருகிறது

    ஒருவேளை இந்த விதைகள் பயோ தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் கொள்கிறது. சீனா அமெரிக்கா மீது, அங்கிருக்கும் பயிர்கள் மீது நிகழ்த்தும் பயோ தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் கொள்கிறது. இதை தற்போது கெமிக்கல் சோதனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் சந்தேகம் கொள்ள வேண்டிய விஷயம் கனடாவிற்கும் இதே பார்சல்கள் சென்றுள்ளது.

    கனடா மக்கள்

    கனடா மக்கள்

    கனடாவில் இருக்கும் மக்களுக்கும் இதே பார்சல் சென்று இருக்கிறது. சீனாவுடன் கனடா மோதலில் இருக்கும் நிலையில் இதே பார்சல் கனடாவிற்கும் சென்று உள்ளது. இதனால் கண்டிப்பாக இது சீனாவின் வேலையாக இருக்கும் என்று மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள். ஆனால் சீனா இந்த புகாரை மொத்தமாக மறுத்துள்ளது.

    English summary
    People in the USA get Seeds parcel from China: FBI investigates the issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X