நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் 2 நாட்களில் கடுமையாக உயர போகும் பெட்ரோல் விலை.. அமெரிக்காவிற்கு சுஷ்மா அவசர கடிதம்!

இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் இரண்டு நாட்களில் புதிய உச்சம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Petrol price hike | உயர போகும் பெட்ரோல் விலை!.. அமெரிக்காவிற்கு சுஷ்மா கடிதம்!

    நியூயார்க்: இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் இரண்டு நாட்களில் புதிய உச்சம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவசர அவசரமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ஈரானிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்க கூடாது என்று அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது. ஈரானின் அணு ஆயுத பயன்பாடு காரணமாக, அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது.

    ஈரானிடம் எண்ணெய் பொருட்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா முடிவெடுத்து உள்ளது.

    2 நாட்கள்தான் இருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நெருக்கும் டிரம்ப்!2 நாட்கள்தான் இருக்கிறது.. சீக்கிரம் முடிவெடுங்கள்.. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நெருக்கும் டிரம்ப்!

    என்ன அவகாசம்

    என்ன அவகாசம்

    இதற்காக அமெரிக்கா மொத்தம் 6 மாதம் அவகாசம் கொடுத்து இருந்தது. இந்தியா, துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் மே 2ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் இந்தியா இதில் முடிவெடுக்க வேண்டும்.

    தடை விதிக்க முடிவு

    தடை விதிக்க முடிவு

    மே 2ம் தேதிக்குள் இந்தியா ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடையை விதித்துவிடும். இதனால் தற்போது அவசர அவசரமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதில் சுஷ்மா, தற்போது இந்தியாவில் தேர்தல் நடந்து வருகிறது. அதனால் அமெரிக்கா அளித்துள்ள கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும். புதிதாக பதவி ஏற்கும் அரசு இதில் அவர்களின் கொள்கை முடிவை எடுக்கும். அதனால் மே 2ம் தேதி வரை வழங்கப்பட்டு இருக்கும் அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    அதிகமாக உயரும்

    அதிகமாக உயரும்

    ஆனால் சுஷ்மாவின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. மே 2ம் தேதி என்பதில் அமெரிக்கா உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. இதனால் மே 2ம் தேதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலை அதிகம் ஆகும். மே இரண்டாம் வாரத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

    English summary
    Petrol, Diesel price may hit new high as India might stand against Iran after USA's sanction threat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X