• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து.. சிறப்பு திட்டத்தை ஐநாவில் சொன்ன பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும் என ஐநா சபையில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றடைந்தார். கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்றார். நேற்று குவாட் அமைப்பு மாநாடு மற்றும் அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்

திருப்பத்தூரில் பகீர்.. 'நான் இல்லாம நீ எப்படி இருப்ப?' மனைவியை பெட்ரோல் ஊற்றிய எரித்த சைக்கோ கணவர்திருப்பத்தூரில் பகீர்.. 'நான் இல்லாம நீ எப்படி இருப்ப?' மனைவியை பெட்ரோல் ஊற்றிய எரித்த சைக்கோ கணவர்

மோடி வருகை

மோடி வருகை


இந்நிலையில் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு இன்று பிரதமர் மோடி வந்தடைந்தார். மாலை 6.30மணி அளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு ஐநா பொதுச்சபையின் தலைமையகத்திற்கு வந்தார். அப்போது ஓட்டல் முன் ஏராளமான இந்தியர்கள் தேசிய கொடியுடன் திரண்டு வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஐநா சபையில் மோடி

ஐநா சபையில் மோடி

இந்நிலையில் ஐநா பொதுச்சபையின் 76வது அமர்வு கூட்டம் மாலையில் தொடங்கியது. கொரோனாவில் இருந்து மீண்டு வளர்ச்சியை மறுகட்டமைப்பதை மையக் கருவாகக் கொண்டு ஐ.நா.பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த கூட்டத்தில பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று இருந்தனர். அவர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நூறு ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண குடும்பம்

சாதாரண குடும்பம்

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம். இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நாவில் பேசுகிறேன். குஜராத் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் கடந்த 20 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இப்போது 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

6 லட்சம் கிராமங்கள்

6 லட்சம் கிராமங்கள்

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கடைக்கோடி மக்களை சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது. இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது.
ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது.

எம்ஆர்என்ஏ தடுப்பூசி

எம்ஆர்என்ஏ தடுப்பூசி

அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமாகிறது. பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். சொட்டுமருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆகியவை இந்தியாவில் தயாராகின்றன

மோடி கோரிக்கை

மோடி கோரிக்கை

ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை இந்திய அரசு அளித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன்வர வேண்டும்" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

English summary
In the last 1.5 years, the entire world has been facing the worst pandemic in 100 years, I pay tribute to all those who have lost their lives in this deadly pandemic and I express my condolences to their families: PM Narendra Modi addresses 76th Session of UNGA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X