நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜோ பிடனுக்கு போன் செய்த பிரதமர் மோடி.. அமெரிக்க - இந்திய உறவு குறித்து பேச்சு.. செம திருப்பம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் உடன் பிரதமர் மோடி இன்று போனில் உரையாடினார். தேர்தலில் வென்ற பிடனுக்கு போன் செய்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Recommended Video

    செம திருப்பம்! Joe Biden-னிடம் Modi என்ன பேசினார் தெரியுமா? | Oneindia Tamil

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 290 இடங்களில் வென்று, அடுத்த அதிபராக தேர்வாகி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 232 இடங்களில் வென்று, தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக பிடன் தேர்வாகி உள்ள நிலையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இந்திய பிரதமர் மோடி கடந்த வாரம் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    ஆப்கான், ஈரான், சோமாலியா.. அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க டிரம்ப் பிளான்.. என்ன நடக்கிறது பென்டகனில்?ஆப்கான், ஈரான், சோமாலியா.. அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க டிரம்ப் பிளான்.. என்ன நடக்கிறது பென்டகனில்?

    மோடி

    மோடி

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் உடன் பிரதமர் மோடி இன்று போனில் உரையாடினார். தேர்தலில் வென்ற பிடனுக்கு போன் செய்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.இது குறித்து டிவிட் செய்துள்ள பிரதமர் மோடி, இந்திய - அமெரிக்க உறவின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் உரையாற்றினோம்.

    முன்னுரிமை

    முன்னுரிமை

    2 நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசினோம். கொரோனா, காலநிலை மாற்றம், 2 நாட்டு ஒற்றுமை குறித்து ஆலோசனை செய்தோம். துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸுக்கும் பிடன் மூலம் எனது வாழ்த்துக்களை அனுப்பி உள்ளேன்.

    வெற்றி

    கமலா ஹாரிஸின் வெற்றி மிகப்பெரிய பெருமை அளிக்க கூடிய விஷயம். அமெரிக்க இந்தியர்களுக்கு இந்த வெற்றி உத்வேகம் அளிக்கும். இந்தியா - அமெரிக்க உறவின் நெருக்கத்திற்கு வலிமையான காரணமாக இருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு கமலா ஹாரிஸ் வெற்றி பெரிய உத்வேகம் அளிக்கும், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மோடி

    பிரதமர் மோடியின் இந்த போன் கால் இரண்டு நாட்டு உறவில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வருங்கால அதிபர் பிடன் உடன் மோடி நெருக்கமாவதற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் உடன் மோடி நெருக்கமாக இருந்த நிலையில் பிடன் உடன் நட்பாக இருப்பாரா என்று கேள்விகள் எழுந்தது.. இந்த நிலையில் நேரடியாக பிடனுக்கு போன் செய்து மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    English summary
    PM Modi called US President-elect Joe Biden and wished him for the victory in election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X