நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை கூட்டங்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி வியாழக்கிழமை சந்தித்து உரையாடினர்.

அமெரிக்காவுடனான ஈரானின் மோதல் போக்கை கருத்தில் கொண்டு இந்த சந்திப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்த சந்திப்பிலிருந்து, அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்காக, இந்தியா தனது சுயமான வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு சமரசத்திற்கும் ஆளாகாது என்ற ஒரு தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது.

PM Modi meets Iranian President Rouhani on sidelines of UNGA

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. இரு தலைவர்களிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.

ஈரானுடனான உறவை பலப்படுத்தவும், மேற்கு ஆசியாவுடனான இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டு, பிரதமர் மோடி 2016 மே மாதம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றிருந்தார். அப்போது, ​​இந்தியாவும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரு டஜன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, சபாஹர் துறைமுகத்தின் மேம்பாடு இதில் முக்கியமான ஒரு ஒப்பந்தம்.

பின்னர், இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் மூன்று நாடுகளிடையே துறைமுகத்தின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2018ம் ஆண்டு பிப்ரவரியில், ரூஹானி இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு தசாப்தத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த முதல் ஈரானிய அதிபர் என்ற பெருமையை பெற்றார். அவரது வருகையின் போது, ​​இரு தரப்பினருக்கும் நடுவே பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

பாஜகவுக்கு 144... சிவசேனாவுக்கு 126... உத்தவிடம் இறங்கி வந்த அமித்ஷாபாஜகவுக்கு 144... சிவசேனாவுக்கு 126... உத்தவிடம் இறங்கி வந்த அமித்ஷா

பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கடந்த சில நாட்களில் இரண்டு முறை சந்தித்துள்ளனர். அண்மையில் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ஈரான் உள்ளானதிலிருந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்கா தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதையும் இந்தியா நிறுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சவுதி அரேபியாவுக்கு பிறகு, இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் சப்ளையராக ஈரான் இருந்து வந்தது. அதில் சமரசம் செய்தபோதிலும், ஈரான் அதிபரை சந்தித்து பேசுவதில் இந்தியா சமரசம் செய்யவில்லை.

English summary
Prime Minister Narendra Modi met Iranian President Hassan Rouhani on Thursday and the two leaders discussed issues of mutual and regional interests. Their meeting was keenly awaited as it comes amid an escalating face-off between Iran and the United States on Tehran's nuclear programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X