• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒரே வார்த்தையில்.. ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கொடுத்த சூப்பர் பதிலடி

Google Oneindia Tamil News

நியூயார்க் : ஐநாவில் சனிக்கிழமை உரையாற்றும் போது உலகிற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகம் தடுக்க வேண்டும் என்று வலிறுத்தினார்.
பயங்கராவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றடைந்தார். கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்றார். நேற்று குவாட் அமைப்பு மாநாடு மற்றும் அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்

திருப்பத்தூரில் பகீர்.. 'நான் இல்லாம நீ எப்படி இருப்ப?' மனைவியை பெட்ரோல் ஊற்றிய எரித்த சைக்கோ கணவர்திருப்பத்தூரில் பகீர்.. 'நான் இல்லாம நீ எப்படி இருப்ப?' மனைவியை பெட்ரோல் ஊற்றிய எரித்த சைக்கோ கணவர்

 மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

இந்நிலையில் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு இன்று பிரதமர் மோடி வந்தடைந்தார். மாலை 6.30மணி அளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு ஐநா பொதுச்சபையின் தலைமையகத்திற்கு வந்தார். அப்போது ஓட்டல் முன் ஏராளமான இந்தியர்கள் தேசிய கொடியுடன் திரண்டு வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 பாகிஸ்தானுக்கு பதிலடி

பாகிஸ்தானுக்கு பதிலடி

இந்நிலையில் ஐநா பொதுச்சபையின் 76வது அமர்வு கூட்டம் மாலையில் தொடங்கியது. இந்த ஆண்டின் பொது சபை விவாதத்தின் கருப்பொருள், கொரோனாவிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் வலிமையை உருவாக்குதல், தொடர்ந்து புனரமைத்தல், உலக தேவைகளை பூர்த்தி செய்தல், மக்களின் உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை புத்துயிர் பெறுதல் ஆகியவையாக இருந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றியபோது இந்தியாவை இந்து அரசு என்று அழைத்தார். முஸ்லீம்களுக்கு கொடுமை இழைக்கப்படுவதாக கூறினார். இதற்கு பிரதமர் மோடி தனது உரையில் கொடுத்துள்ளார். பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பேசினார் ,

பயங்கரவாதம்


இன்று ஐநாவில் உரையாற்றும் போது உலகிற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மோடி, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் வளர்ந்தால் அது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று எச்சரித்தார். பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகம் தடுக்க வேண்டும் என்று வலிறுத்தினார்.
பயங்கராவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

 நிச்சயம் வெற்றி

நிச்சயம் வெற்றி

ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் அவர்களை காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அச்சமின்றி நாம் நமது இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐநாவில் பிரதமர் மோடி உரையின் போது குறிப்பிட்டார்.

English summary
PM narendra Modi super reply to pakistan at UNGA PM Modi says at UNGA,"...Countries with regressive thinking that are using terrorism as a political tool need to understand that terrorism is an equally big threat for them. It has to be ensured that Afghanistan isn't used to spread terrorism or launch terror attacks..."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X