நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என்.. பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வியால் சிக்கலில் வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என், சிக்கலில் வெள்ளை மாளிகை!- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையின் எச்.ராஜா அல்லது ரஜினி என்றுதான் கூற வேண்டும். அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இப்போதெல்லாம் ஏழாம் பொருத்தம்தான்.

    தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க அதிபரை வைத்து செய்வதையே வேலையாக வைத்து இருக்கிறது செய்தி நிறுவனங்கள். அந்த வகையில் கடந்த வாரம் அவர் செய்த சர்ச்சை ஒன்றால் தற்போது அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

     என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்தான் அந்த சம்பவம் நடந்தது. அவரிடம் சிஎன்என் நிரூபர் ஜிம் அகோஸ்டா நிறைய கேள்விகளை கேட்டார். அமெரிக்காவில் குடியேறும் மெக்சிகோ மக்கள் பற்றியும், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடும் பற்றியும் கேட்டார். ஆனால் டிரம்ப் அதற்கு பதில் அளிக்காமல், அவரை அமரும்படி கோபமாக பேசினார்.

     பொய்யான புகார்

    பொய்யான புகார்

    ஆனால் ஜிம் அகோஸ்டா டிரம்ப் பேச்சை கேட்காமல் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனால் டிரம்ப்பின் உதவியாளர்களில் ஒருவரான பெண் ஒருவர், ஜிம் அகோஸ்டாவின் மைக்கை வந்து பிடுங்கினார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இது வீடியோவாகவும் வெளியானது.

     தடை செய்தனர்

    தடை செய்தனர்

    ஆனால் அந்த பெண் மைக்கை வாங்கும் போது ஜிம் அகோஸ்டா அந்த பெண்ணை தவறாக தீண்டினார் என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் வீடியோ வெளியே வந்த காரணத்தால் ஜிம் அகோஸ்டா எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது. ஆனால் வெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிக்கவும், உள்ளே வரவும் ஜிம் அகோஸ்டாவிற்கு டிரம்ப் தடை விதித்தார். அந்த பெண்ணை தவறாக சீண்டினார் என்று கூறி தடை விதித்தார்.

     வழக்கு தொடுத்துள்ளது

    வழக்கு தொடுத்துள்ளது

    இந்த நிலையில்தான் தற்போது டிரம்ப் மீது செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது. தன்னுடைய பத்திரிகையார் ஜிம்மிற்கு தடை விதித்தது தவறு. அவர் மீதான தடையை நீக்க வேண்டும். டிரம்ப் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இது அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Power of Fourth Piller: CNN sues Trump over Jim Acosta controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X