நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கதையை முடித்துவிட்டோம்.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டது எப்படி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கதையை முடித்துவிட்டோம்....திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்.!

    நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டது எப்படி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கி உள்ளார்.

    சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார்.

    2012 ஆண்டில் இருந்து அபு பக்கர் அல் பக்தாதி தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை அமெரிக்க படை கொன்றுள்ளது

    ஆபரேஷன் எப்படி

    ஆபரேஷன் எப்படி

    இந்த ஆபரேஷன் குறித்து டிரம்ப் விளக்கி உள்ளார். அதில், நேற்று இரவு அமெரிக்கா, உலகின் நம்பர் 1 தீவிரவாத தலைவனை நீதிக்கு முன் நிறுத்தி உள்ளது. அபு பக்கர் அல் பக்தாதி தற்போது இறந்துவிட்டார். அபு பக்கர்தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவராக இருந்தது. ஐஎஸ் அமைப்பு உலகின் மிகவும் மோசமான, கொடூரமான அமைப்பு.

    தேடி வந்தது

    தேடி வந்தது

    அமெரிக்க அரசு பக்தாதியை பல வருடங்களாக தேடி வந்தது. என்னுடைய அரசின் மிக முக்கியமான குறிக்கோள் பக்தாதியை கொல்வதாக இருந்தது. தற்போது அது நிறைவேறி இருக்கிறது. இரவு நேரத்தில் மிகவும் தைரியமாக ரெய்டு நடத்தப்பட்டு, இந்த ஆப்ரேஷன் அமெரிக்க படை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    எங்கு நடந்தது

    எங்கு நடந்தது

    வடமேற்கு சிரியாவில் இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. அமெரிக்க படை மிக சிறப்பாக இந்த தாக்குதலை நடத்தியது. இந்த ஆபரேஷனில் அமெரிக்க வீரர்கள் யாரும் சாகவில்லை. ஆனால் இந்த தாக்குதலில் பக்தாதியின் பாதுகாவலர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் பலர் மரணம் அடைந்தனர்.

    பலர்

    பலர்

    அங்கு இருந்த குகை ஒன்றின் இறுதிக்கு சென்ற பின் பக்தாதி மரணம் பலியானார். கத்திக் கொண்டே, அழுது கொண்டே, பலியானார். அங்கு இருந்த சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். 11 குழந்தைகள் அங்கிருந்து காயமின்றி வெளியேற்றப்பட்டனர். பக்தாதி தன்னுடன் தன்னுடைய 3 குழந்தைகளை எடுத்துக் கொண்டு குகைக்குள் சென்றுவிட்டார்.

    மோப்ப நாய்கள்

    மோப்ப நாய்கள்

    அமெரிக்க படையின் மோப்ப நாய்கள் அவரை துரத்தி சென்றது. அவர் குகையின் இறுதிக்கு சென்றுவிட்டார். பின் தன்னுடைய உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்து, உடல் சிதறி பலியானான். அதில் அவனுடைய மூன்று குழந்தைகளும் பலியானார்கள்.

    2-3 பிளான்

    2-3 பிளான்

    கடந்த சில வாரமாக நாங்கள் அபு பக்கரை கண்காணித்து வந்தோம். 2-3 திட்டங்கள் போடப்பட்டு அது கைவிடப்பட்டது. கடைசியில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். ரஷ்யாவின் வான் பகுதியை இந்த தாக்குதலுக்காக நாங்கள் பயன்படுத்தினோம். இது மிகவும் கடினமான மிஷன்.

    நேரடி ஒளிபரப்பு

    நேரடி ஒளிபரப்பு

    நான் இதை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். ஆனால் அதை பற்றி என்னால் விளக்க முடியாது. அங்கு இருந்த சிலர் பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தினார்கள். கடைசியில் அவர்களும் என் கவுண்டர் செய்யப்பட்டார். அபு பக்கர் ஒரு நாய் போல அச்சத்துடன் பலியானான். ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக், குர்து படைகளுக்கு நன்றி, என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    President Trump explains how the US forces killed ISIS chief Abu Bakr Al Baghdadi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X