நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவுதி மன்னர் பேசிக்கொண்டு இருக்கும் போதே.. போனை எடுத்த டிரம்ப்.. ஜி 20 மீட்டில் நடந்த பரபர சம்பவம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே அதிபர் டிரம்ப் பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வது இல்லை. தனது அதிபர் பணியையே அவர் சரியாக செய்வது இல்லை.

வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வருவது இல்லை, உள்ளேயே முடங்கி கிடக்கிறார், வெறுமனே டிவிட் மட்டுமே செய்கிறார் என்று டிரம்ப் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையம் மூலம் நடந்த சர்வதேச ஜி 20 மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார்.

மாசம் பொறந்தா லட்ச ரூபாய் சம்பளமாம்.. அதுவும் நம்ம சென்னையிலதான் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!மாசம் பொறந்தா லட்ச ரூபாய் சம்பளமாம்.. அதுவும் நம்ம சென்னையிலதான் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

டிரம்ப்

டிரம்ப்

இந்த மாநாட்டில் 20 நாட்டு தலைவர்களும் கொரோனா பாதிப்பு, வேக்சின், பொருளாதார மந்தநிலை என்று பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர். சர்வதேச தலைவர்கள் இந்த வீடியோ கான்ஃபிரன்சில் பேசிக்கொண்டு இருக்கும் போது டிரம்ப் அதில் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை. எல்லோரும் தலைவர்களின் பேச்சை கேட்க டிரம்ப் மட்டும் வேறு எங்கோ பார்த்து இருக்கிறார்.

 9 நிமிடம்

9 நிமிடம்

அதிலும் சவுதி கிங் சல்மான் பின் அப்துலாசிஸ் பேசிய போது டிரம்ப் அதை கொஞ்சம் கூட கவனிக்கவில்லை. சவுதி கிங் சல்மான் பின் அப்துலாசிஸ் மொத்தம் 9 நிமிடங்கள் பேசினார். இந்த 9 நிமிடங்களும் டிரம்ப் அதை கவனிக்காமல் வேறு எங்கு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தார். ஆர்வம் இன்றி டிரம்ப் காணப்பட்டார்.

டிவிட் செய்தார்

டிவிட் செய்தார்

இதெல்லாம் போக ஒருபடி மேலே போய் சவுதி கிங் சல்மான் பின் அப்துலாசிஸ் பேசும்போதே டிரம்ப் டிவிட்டரில் டிவிட்களை செய்ய தொடங்கினார். தேர்தலில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. முறைகேட்டை அம்பலப்படுத்துவோம் என்று டிரம்ப் டிவிட் செய்து வந்தார்.

டிவிட்

டிவிட்

மேலும் தேர்தல் முறைகேடு தொடர்பாக குடியரசு கட்சியினர் செய்த டிவிட்டிற்கும் டிரம்ப் இதேபோல் டிவிட்டரில் பதில் அளித்து வந்தார். ஒரு நிமிடம் கூட டிரம்ப் மீட்டிங்கை கவனிக்கவில்லை. டிரம்ப் இப்படி நடந்து கொண்ட விதம் அங்கு இருந்த தலைவர்கள் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

மோசம்

மோசம்

இதை எல்லாம் ஜி 20 மாநாடு நடக்கும் போது டிரம்ப் செய்து வந்து இருக்கிறார். ஜி 20 மாநாட்டின் போது டிரம்ப் இப்படி நடந்து கொண்டது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அதிபர் டிரம்பிற்கு தேர்தல் தோல்விக்கு பின் ஆட்சி நிர்வாகம் மீது கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை. நேற்று ஜி 20 மாநாட்டில் மோசமாக நடந்து கொண்ட டிரம்ப் இந்த மாநாட்டிற்கு பின் கோல்ப் விளையாட சென்றதும் பெரிய அளவில் சர்ச்சையானது.

English summary
President Trump was tweeting about the election fraud during the G20 summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X