நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் 2 லட்சம் மக்களின் உயிரை குடித்துள்ளது கொரோனா வைரஸ்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுவதும் 3 கோடி மக்களை பாதித்துள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவில் 68 லட்சம் பேரை பாதித்துள்ளது. 2 லட்சம் அமெரிக்கர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த கடுமையான சூழ்நிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பதவியில் நீடிப்பாரா என்பதை வாக்காளர்கள் தீர்மானிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே, கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து அமெரிக்கா தனது 200,000 வது மரணத்தை செவ்வாய்க்கிழமை பதிவு செய்துள்ளது.

Presidential Election 2 Lakh Coronavirus Deaths in US

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டியலின்படி, 200,005 அமெரிக்கர்கள் இறந்துவிட்டனர் மற்றும் 68 லட்சம் பேர் பேர் நாவல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 137,272 பேரும். இந்தியாவில் 88,935 பேரும் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, உலக மக்கள்தொகையில் நான்கு சதவிகிதம் மற்றும் அதன் பதிவு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளில் 20 சதவிகிதம் மரணம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சியினர் அதிபர் டிரம்ப் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

"கடந்த ஆறு மாதங்களில் டொனால்ட் ட்ரம்பின் பொய்கள் மற்றும் திறமையின்மை காரணமாக, (அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க வாழ்வின் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றை நாங்கள் கண்டிருக்கிறோம்" என்று அவரது ஜனநாயக போட்டியாளரான ஜோ பைடன் திங்களன்று தெரிவித்தார்.

நெருக்கடியான இந்த கால கட்டத்தில் நாட்டிற்கு தற்போது வலிமையான தலைமை தேவைப்படுகிறது. எந்த ஒரு நாட்டினரும் கொடுக்காத மோசமான விலையை அமெரிக்கா செலுத்தியுள்ளது.

டென்னிஸ் மேட்ச் பார்க்காம ஏகத்துக்கும் ஏடாகூடமா 'அந்த சேட்டை' செய்த டிரம்ப்-மாடல் அழகி புகார் டென்னிஸ் மேட்ச் பார்க்காம ஏகத்துக்கும் ஏடாகூடமா 'அந்த சேட்டை' செய்த டிரம்ப்-மாடல் அழகி புகார்

அதே நேரத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு விரைவான ஒப்புதல் அளிப்பது தனது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று டிரம்ப் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். நாங்கள் ஒரு தடுப்பூசியை விநியோகிப்போம், வைரஸை தோற்கடிப்போம், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவோம், முன் எப்போதும் இல்லாத வகையில் செழிப்பு, ஒத்துழைப்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் புதிய சகாப்தத்தில் நுழைவோம் என்று அதிபர் டிரம்ப் ஐ.நா பொதுச் சபை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி இருக்கும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Donald Trump's lies and incompetence in the past six months, We have seen one of the gravest losses of American life in history, his Democratic rival Joe Biden said Monday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X