நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எமர்ஜென்சி".. கொரோனாவை குணப்படுத்தும் ரீஜெனரான் மருத்துவமுறை.. அமெரிக்காவில் அவசர அனுமதி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட ரீஜெனரான் (Regeneron) நிறுவனத்தின் சிகிச்சை முறைக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களுக்கு இடையே அங்கு ஃபைசர் நிறுவனம் தனது வேக்சினுக்கு அவசர அனுமதி கேட்டுள்ளது. இன்னொரு பக்கம் மாடர்னா நிறுவனமும் தனது மருந்துக்கு அனுமதி கேட்க உள்ளது.

தம்மாண்டுனு நெனக்காதீங்க.. எபோலா, கொரோனாவைவிட மோசமான சப்பரே வைரஸ்.. அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை!தம்மாண்டுனு நெனக்காதீங்க.. எபோலா, கொரோனாவைவிட மோசமான சப்பரே வைரஸ்.. அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

அனுமதி

அனுமதி

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட ரீஜெனரான் (Regeneron) நிறுவனத்தின் சிகிச்சை முறைக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரீஜெனரான் (Regeneron) நிறுவனம் டிரம்பிற்கு கொரோனா இருந்த போது அவருக்கு ஆண்டிபாடி சிகிச்சை அளித்தது.

ஆண்டிபாடி சிகிச்சை

ஆண்டிபாடி சிகிச்சை

ரீஜெனரான் (Regeneron) நிறுவனத்தின் ஆண்டிபாடி சிகிச்சை என்பது இரண்டு விதமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆண்டிபாடி கலவையை உடலுக்குள் செலுத்துவது ஆகும். ரீஜெனரான் (Regeneron) நிறுவனத்தின் சிகிச்சையின் படி casirivimab (REGN10933) மற்றும் imdevimab (REGN10987) என்ற இரண்டு ஆண்டிபாடிகள் ஒன்றாக கலக்கப்பட்டு செயற்கையான ஆண்டிபாடி கலவை உருவாக்கப்படும்.

கலவை

கலவை

இந்த கலவை மருந்தாக உடலில் செலுத்தப்படும். இந்த ஆண்டிபாடிகளின் கலவை கொரோனா உடலில் பெருகுவதை தடுக்கும். அதாவது கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் ஒன்றில் இருந்து பலதாக வளர்வதை இது தடுக்கும். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இந்த மருத்துவ முறை கொடுக்கப்பட்டு, அது பெரிய அளவில் பலன் அளித்தது.

பலன் அளித்தது

பலன் அளித்தது

அதேபோல் இது தொடர்பாக 799 பேரிடம் நடந்த மருத்துவ ஆய்வில் casirivimab (REGN10933) மற்றும் imdevimab (REGN10987) பெற்றவர்கள் வேகமாக குணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா நோயாளிகள் வேகமாக குணமாக இது உதவுவதால், தற்போது ரீஜெனரான் (Regeneron) நிறுவனத்தின் சிகிச்சை முறைக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கி உள்ளது.

அவசர அனுமதி

அவசர அனுமதி

அவசர அனுமதி இந்த மருந்துக்கு கிடைத்துள்ளது. அதிபர் டிரம்ப் இதை தன்னுடைய சாதனையாக வெளிக்காட்ட தற்போது முயன்று வருகிறார். ஏற்கனவே ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்தற்கு தான் ஒரு காரணம் என்பது போல டிரம்ப் பேசி வருகிறார். இவர் கொண்டு வந்த ஆப்ரேஷன் வார்ப் ஸ்பீட் திட்டம் மூலம் இந்த மருந்துகள் உருவாக்கப்பட்டது.

 நான்தான்

நான்தான்

இந்த நிலையில் தற்போது தனக்கு அளிக்கப்பட்ட மருத்துவ முறைக்கு அவசர அனுமதி கிடைத்து இருப்பது டிரம்பிற்கு பெருமையை தேடி தந்துள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின் டிரம்ப் பெரிய அளவில் கெட்ட பெயர் எடுத்துவிட்டார். அரசு பணிகளை கவனிப்பது இல்லை என்று இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனா வேக்சின் மூலம் இழந்த பெயரை மீட்டு எடுக்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார்.

English summary
Regeneron covid-19 antibody get emergency authorization in the US by which Trump treated for Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X