நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டென சுற்றுவதை நிறுத்திய பூமி "உட்கரு".. பூமியின் திசைக்கு எதிர் திசையில் சுழலும் பந்து? என்னாச்சு

Google Oneindia Tamil News

நியூயார்க்: நமது பூமியின் மையப்பகுதி அப்படியே மெதுவாக நின்றுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எதிர் திசையில் சுற்ற தொடங்கி உள்ளதாக பூகோள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நமது பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான். நமது தரையில் ஒரு துளை போட்டு, அந்த துளையை 5000 கிலோ மீட்டர் ஆழத்திற்கு தோண்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

அப்படி தோண்டும் பட்சத்தில் 5000 கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் பூமியின் மையத்தை அடைந்து விடுவோம். அந்த பகுதியில் வெறும் நெருப்பு கோளம்தான் இருக்கிறது. இங்கே திரவ நிலையில் இரும்பு குழம்பு எரிந்தபடி காணப்படும்.

வானில் நடக்கும் பேரதிசயம்..50 ஆயிரம் ஆண்டு கழித்து பூமி பக்கம் வரும் அரிய பச்சை நிற வால் நட்சத்திரம் வானில் நடக்கும் பேரதிசயம்..50 ஆயிரம் ஆண்டு கழித்து பூமி பக்கம் வரும் அரிய பச்சை நிற வால் நட்சத்திரம்

சுற்றும்

சுற்றும்

இந்த கோளம் தனியாக உட்பகுதியில் சுற்றிக்கொண்டு இருக்கும். அதாவது ஒரு பந்துக்குள் இன்னொரு பந்து இருப்பதாக யோசியுங்கள். மேலே இருக்கும் பந்து ஒரு வேகத்தில் சுற்றுகிறது. உள்ளே இருக்கும் பந்து இன்னொரு வேகத்தில் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிதான் பூமியின் மையத்தில் இருக்கும் இந்த கோளமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த பூமியின் மைய கோளம் எப்படி சுற்றுகிறது, எதனால் சுற்றுகிறது, இதன் சுற்றும் வேகம் எவ்வளவு என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. இதில் ஆராய்ச்சியாளர்கள் பலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உட்புறம்

உட்புறம்

பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், நிலநடுக்க அலைகள் போன்றவற்றை வைத்துதான் இந்த பூமியின் மையப்பகுதியின் பண்புகள் கணிக்கப்படுகின்றன. ஆனாலும் இவை எல்லாம் வெறும் கணிப்புதான். இன்னும் முழுமையாக பூமியின் மையப்பகுதியில் கொள்கைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் Nature Geoscience என்ற அறிவியல் ஆய்வு அறிக்கையில் பூமியின் மைப்பகுதி தொடர்பாக ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் மூலம் உருவாகும் அலைகளை வைத்து, அந்த அலைகள் பூமிக்கு அடியில் எதிரொலிக்கும் விதங்களை வைத்து இந்த ஆய்வை செய்து அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

ஆய்வு

ஆய்வு

கடந்த 60 வருடமாக ஏற்பட்ட நிலநடுக்கங்களை வைத்து இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். Xiaodong Song மற்றும் Yi Yang என்ற China's Peking Universityயை சேர்ந்த மாணவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அவர்கள் அந்த ஆய்வில் பூமியின் மையப்பகுதி 2009ல் சுற்றுவதை நிறுத்திவிட்டது. தற்போது பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுற்ற தொடங்கி உள்ளது. பூமியின் திசையில் வேறு வேகத்தில் சுற்றிக்கொண்டு இருந்த மையப்பகுதி தற்போது பூமிக்கு எதிர் திசையில் சுற்ற தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளனர்.

35 வருடம்

35 வருடம்

அதோடு ஒவ்வொரு 35 வருடத்திற்கும் இது தனது சுற்றும் திசையை மாற்றுவதாகவும் தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்னதாக 1970 களில் ஒரு முறை இதேபோல் பூமியின் மையம் சுற்றும் திசையை மாற்றி உள்ளது. அதேபோல் 2040ல் இதேபோல் மீண்டும் பூமியின் சுற்றும் திசையை மாற்றும். ஆனால் இதனால் பூமி சுற்றுவதில் எந்த மாற்றமும் இருக்காது. பூமியில் லேசாக பகல் நேரம் அதிகரிக்கும். ஆனால் அது மிக மிக லேசாக மட்டுமே அதிகரிக்கும். ஆனால் இந்த மைய பகுதியின் சுழற்சி மாறுப்பாட்டால் உண்மையில் என்ன நடக்கும். பூமியில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

சில ஆராய்ச்சியாளர்கள்

சில ஆராய்ச்சியாளர்கள்

ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் இதை எதிர்த்து உள்ளனர். பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுற்றுகிறது என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் வேண்டும். உறுதியான ஆதாரங்கள் இன்றி அதை சொல்ல முடியாது. அதே சமயம் இந்த ஆராய்ச்சியில் நிறைய டேட்டாக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆராய்ச்சியை பாராட்ட வேண்டும் என்று, இந்த அறிக்கையை ஆய்வு செய்த சக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். பூமியின் மையம் சுற்றுவதை நிறுத்திவிட்டது, மையம் லேசாக நகர்ந்துவிட்டது என்றும் இதற்கு முன் சில ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில்தான் பூமியின் மையம் எதிர் திசையில் சுற்றுவதாக புதிய ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்து உள்ளது.

English summary
Researchers are saying the Earth core stopped its rotation and started rotating in opposite side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X