நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீனஸ் கிரகத்தில் உயிரினமா? வளிமண்டத்தில் காணப்பட்ட வாயு.. வியந்து போன ஆராய்ச்சியாளர்கள்.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரிய குடும்பத்தில் இருக்கும் வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்தில் சிறிய அளவிலான மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

உலகம் முழுக்க பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரிய குடும்பத்திலும், அதற்கு வெளியிலும் இருக்கும் கிரகங்களில் உயிரினங்கங்களை தேடி வருகிறார்கள்.பூமியை போலவே இருக்கும் கிரகங்களில் உயிரினங்கள் உள்ளதா என்று சோதனை செய்து வருகிறார்கள்.

முக்கியமாக செவ்வாய் கிரகம், வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகம், வியாழன் கிரகம் ஆகிய கிரகங்களிலும் பல்வேறு குட்டி குட்டி நிலவுகளிலும் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். பூமிக்கு வேற்றுகிரகத்தின் தொழில்நுட்பத்தை கொண்ட பறக்கும் தட்டுகள் வந்ததாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஒப்புக்கொண்டது கூட குறிப்பிடத்தக்கது.

பிற உச்ச நடிகர்களும் இதை பின்பற்ற வேண்டும்.. சூர்யாவிற்கு வாழ்த்துகள்.. புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்!பிற உச்ச நடிகர்களும் இதை பின்பற்ற வேண்டும்.. சூர்யாவிற்கு வாழ்த்துகள்.. புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்!

நிலை என்ன

நிலை என்ன

இந்த நிலையில் சூரிய குடும்பத்தில் இருக்கும் வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்தில் சிறிய அளவிலான மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி ஹவாய் மற்றும் சிலியில் இருக்கும் இரண்டு பெரிய தொலைநோக்கிகள் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது . வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் உயிரினம் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

பொதுவாக வேற்று கிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க நிறைய சோதனை நடத்தப்படும். தண்ணீர் இருக்கிறதா என்பது தொடங்கி வளிமண்டலம் வரை பல சோதனை நிகழ்த்தப்படும். இதில் முக்கியமானது biosignatures சோதனை ஆகும். அதாவது அங்கு இருக்கும் சில தனித்துவமான காற்றுகள் குறித்த சோதனை. சில வாயுக்களை உயிரினங்கள் மட்டுமே வெளியிடும். பூமியில் மட்டுமே இருக்கும் சில வாயுக்கள் தனித்துவமானது.

விலங்குகள்

விலங்குகள்

விலங்குகள், பாக்டீரியாக்கள் மட்டுமே வெளியிடும் வாயுக்கள் பல உள்ளது. இப்படி ஏதாவது வாயு வேற்று கிரகங்களில் உள்ளதா என்று செய்யப்படும் சோதனைதான் biosignatures சோதனை ஆகும். இந்த சோதனை மூலம்தான் வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் உயிரினம் இருக்கலாம் என்று கண்டுபிடித்து உள்ளனர். அந்த வளிமண்டத்தில் பாஸ்பீன் phosphine என்ற வாயுவை கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் மட்டும் இருக்கும்

பூமியில் மட்டும் இருக்கும்

பூமியில் மட்டுமே இந்த phosphine காணப்படும். அதிலும் எங்கு உயிரினம் இருக்கிறதோ அங்கு மட்டுமே இது காணப்படும். சிறிய சிறிய பாக்டீரியாக்கள் இந்த phosphine வாயுவை வெளியிடும். அதேபோல் சில பறவைகளில் எச்சங்கள், பென்குயின் போன்ற உயிரினங்களின் கழிவுகளில், வயிற்றில் இருந்து phosphine வெளியாகும். உயிரினம் இல்லாமல் phosphine வெளியாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

உள்ளது

உள்ளது

சல்பூரிக் ஆசிட் நிறைந்த வெள்ளி கிரகத்தின் வளிமண்டத்தில் இந்த வாயு காணப்பட்டுள்ளது. இதை கண்டுபிடித்துள்ள நிலையில், அங்கு சிறிய அளவிலான மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதில் இருந்து இந்த வாயுக்கள் வெளியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்த மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா அங்கே எப்படி இருக்கும் என்றும் கணித்து உள்ளனர். வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை 425 டிகிரி செல்ஸியஸ் ஆகும். இதனால் தரையில் இந்த மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்காது. ஆனால் மேலே 50 கிமீ உயரத்தில் கார்பன் டை ஆக்சைட் நிறைந்த கட்டியான மேக கூட்டங்கள் உள்ளது. இங்கே அறை வெப்பநிலை இருக்க வாய்ப்புள்ளது. அதனால் இங்கே இந்த மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது. இங்கே நீர் துளி காணப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஆனால் மறுப்பு

ஆனால் மறுப்பு

ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுத்து உள்ளனர். இந்த phosphine காரணமாக உறுதியாக அங்கே உயிரினம் உள்ளது என்று கூறி விட முடியாது. இதை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் . ஒரே அடியாக முடிவு செய்து விட முடியாது. வேறு ஏதாவது இதற்கு காரணம் இருக்கிறதா என்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்று சிலர் கூறியுள்ளனர். நாசா இது குறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.

English summary
Researchers found a possible life on Venus: After they found a specific gas on the atmosphere .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X