நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவை புரட்டி எடுக்கும் செகண்ட் வேவ்.. ஒரே நாளில் 1,707 பேர் மரணம்.. அதிர்ந்து போன வல்லரசு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1707 பேர் கொரோனா காரணமாக பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு தினசரி கொரோனா கேஸ்கள் அதிகாரத்து வருகிறது. முதல் அலையில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களை விட இப்போது தினசரி கேஸ்கள் மிக அதிக அளவில் வருகிறது.

தற்போது அமெரிக்காவில் 11,758,468 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா காரணமாக 255,109 பேர் பலியாகி உள்ளனர். 7,113,970 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Operation Warp Speed: அமெரிக்காவிற்கு கை கொடுத்த Operation Warp Speed: அமெரிக்காவிற்கு கை கொடுத்த "வேக்சின்" அஸ்திரம்.. வேலை செய்யும் டிரம்ப் பிளான்

ஒரே நாள் மரணம்

ஒரே நாள் மரணம்

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1707 பேர் கொரோனா காரணமாக பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை பதிவான ஒருநாள் இறப்பு எண்ணிக்கையில் இதுதான் மிக அதிகம் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த மே 14ம் தேதிக்கு பின் பதிவான மிக மோசமான கொரோனா இறப்பு எண்ணிக்கை இதுதான். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை உயரும் என்று கூறுகிறார்கள்.

எத்தனை வருகிறது

எத்தனை வருகிறது

இதெல்லாம் பழைய கேஸ்களால் வரும் இறப்பு எண்ணிக்கை. புதிய கேஸ்களால் வரும் இறப்பு எண்ணிக்கை இனி அதிகம் ஆகும் என்கிறார்கள். கடந்த 2-3 வாரம் முன் 70-80 ஆயிரம் என்று கேஸ்கள் வந்தது. ஆனால் இப்போது தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமாக வருகிறது. அதிலும் நேற்று 155000 கேஸ்கள் ஒரே நாளில் வந்துள்ளது.

ஒரே நாளில் எப்படி

ஒரே நாளில் எப்படி

இதனால் இறப்பு எண்ணிக்கை இனி வரும் நாட்களில் தினமும் 3000ஐ தாண்டும் என்கிறார்கள். அதிலும் நேற்று ஒரே நாளில் 155000 பேரில் 76830 பேர் அவசர அவசாரமாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். ஒரே நாளில் இத்தனை பேர் மருத்துவமனையில் சேர்வதும் இதுவே முதல்முறை. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 47 மாகாணங்களில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது.

இரண்டாம் அலை

இரண்டாம் அலை

ஆனால் இது கொரோனா சோதனைகள் உயர்த்தப்பட்ட காரணத்தால் அல்ல. தற்போது கொரோனா சோதனைகள் 11% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தினசரி கேஸ்கள் 29% உயர்ந்துள்ளது. இதனால் இது கண்டிப்பாக மோசமான இரண்டாம் அலைதான் என்று கூறியுள்ளனர்.

 மோசமான நிலை

மோசமான நிலை

அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளது. இதன் சோதனைகள் முடிந்து முடிவுகள் வெளியாகி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த மருந்துகளுக்கு அனுமதி கிடைக்கலாம் என்ற நிலையில்.. அமெரிக்காவை இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் புரட்டி எடுத்துள்ளது.

English summary
Rise of second wave: The USA sees highest death toll in single day due to Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X