நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா? விசாரணையில் இறங்கும் அமெரிக்கா!

ரஷ்யாவில் சென்ற வாரம் ஏற்பட்ட அணு கதிர் விபத்து, அணு ஆயுத சோதனை மூலம் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Russia Missile Test | அடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா?- வீடியோ

    நியூயார்க்: ரஷ்யாவில் சென்ற வாரம் ஏற்பட்ட அணு கதிர் விபத்து, அணு ஆயுத சோதனை மூலம் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. உலக நாடுகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

    1986 ஏப்ரல் மாதம் 26ம் தேதி ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய அணு உலைகளில் ஒன்றாக செர்னோபில் அணு உலையில் ஒரு ரியாக்டர் கோர் வெடித்து சிதறியது. ரஷ்யா பல வருடங்களாக எல்லா அணு உலைகளிலும் கவனிக்க தவறிய மிக முக்கியமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விபத்து ஏற்பட்டது.

    செர்னோபில் விபத்து ஏற்பட்டதால் தற்போது அந்த நகரமே மக்கள் பயன்படுத்துவதற்கு தகாத நகரமாக மாறியது. அங்கு இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட நாய் உட்பட அனைத்து உயிரினங்களும் அங்கு கொல்லப்பட்டுள்ளது.

    இப்போதும்

    இப்போதும்

    இன்னும் அங்கு அணு கதிர் வீச்சு இருந்து கொண்டுதான் இருக்கிறது. செர்னோபில் விபத்து ஏற்பட்ட போது முதல் சில நாட்களுக்கு அது குறித்து ரஷ்ய அரசு மௌனம் காத்தது. அதாவது மக்களிடம் செர்னோபில் அணு உலை வெடித்ததை சொல்லவே இல்லை. அணு உலையில் ஒரு விபத்து அதனால் புகை வருகிறது என்று பொய் சொல்லி ஏமாற்றியது.

    என்ன

    என்ன

    ஆனால் விஞ்ஞானிகள் அணு உலையின் ஆபத்தை விளக்கிய பின்பே அது குறித்த எச்சரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே பெரிய விபத்து ஏற்பட்டது.

    ஏன் நெருப்பு

    ஏன் நெருப்பு

    அந்த மையத்தில் இருந்து பெரிய அளவில் புகையும் நெருப்பும் வந்தது. இதுகுறித்து பேட்டி அளித்த ரஷ்யாவின் அணு சக்தி மையம், அணு மின்னணு நிலையத்தில் செய்யப்பட்ட சோதனை ஒன்று தவறாக முடிந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. சிறிய அளவில் அருகில் உள்ள ஊர்களில் அணு கதிர் வீச்சு இருக்கும். மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டது.

    எத்தனை

    எத்தனை

    இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யா இதில் சொன்ன அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால், செர்னோபில் விபத்திற்கு பின் நடந்த பெரிய விபத்து இதுதான் என்று கூறியது. இந்த நிலையில் இது விபத்து இல்லை என்று அமெரிக்கா கூறி வருகிறது. அமெரிக்காவின் உளவுத்துறை இது தொடர்பாக அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஏவுகணை எஞ்சினியர்

    ஏவுகணை எஞ்சினியர்

    இந்த விபத்தில் ஏவுகணை எஞ்சினியர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இதை புடின் மக்களிடம் இருந்து மறைக்கிறார் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இதை பற்றி டிரம்ப் இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் உளவுத்துறை சாட்டிலைட் படங்களை வைத்து இந்த சம்பவத்தை விசாரிக்க உள்ளது.

    English summary
    Russia failed in Atomic missile test caused radiations says the USA in their shocking report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X