நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்டேல் சிலை பின்னணியில் மோடியின் அரசியல் ஆணவம்.. அமெரிக்க ஊடகங்கள் கடும் விமர்சனம்!

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை பிரதமர் மோடியின் அகங்காரத்தால் உருவானது என்று அமெரிக்க நாளிதழ்கள் விமர்சனம் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட உலகின் உயரமான படேலின் சிலை- வீடியோ

    நியூயார்க்: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை பிரதமர் மோடியின் அகங்காரத்தால் உருவானது என்று அமெரிக்க நாளிதழ்கள் விமர்சனம் செய்துள்ளது.

    இன்று பிரதமர் மோடி குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை திறக்க உள்ளார். 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

    இதை உருவாக்க 2389 கோடி ரூபாய் செலவு ஆனது. இந்த நிலையில் இந்த சிலை திறப்பு குறித்து அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்ட போது, பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்துள்ளது.

    இந்து தலைவர்

    இந்து தலைவர்

    ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள் இதுபோல் பிரதமர் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதில் பிரதமர் மோடி, வல்லபாய் பட்டேல் ஒரு விடுதலை போராட்ட வீரர் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சிலை வைக்கவில்லை. அவரை ஒரு இந்து தலைவராக மக்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இந்த சிலையை நிறுவுகிறார்கள் என்றுள்ளது.

    என்ன சொல்கிறது தெரியுமா

    என்ன சொல்கிறது தெரியுமா

    பிரதமர் மோடி தன்னுடைய அரசியல் அகங்காரத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இந்த சிலையை வைத்து இருக்கிறார். அதற்கு மேல் அவருக்கு இதில் பெரிய முன்னேற்ற நோக்கம் எல்லாம் இல்லை. தன்னுடைய வலதுசாரி கொள்கையை பரப்ப வேண்டும் என்றுதான் இந்த சிலையை நிறுவியுள்ளார்.

    வேறு என்ன

    வேறு என்ன

    மேலும் பிரதமர் மோடியும் அவரது கட்சியும், இந்த சிலை மூலம் அரசியல் செய்யலாம் என்று நம்புகிறார்கள். இது தங்களுக்கு தேர்தலின் போது உதவும் என்று நினைக்கிறார்கள் என்று அமெரிக்க நாளிதழ்கள் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமெரிக்க ஊடக விமர்சனம் குறித்து வடஇந்திய ஊடகங்கள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளது.

    எந்த இடத்தில்

    எந்த இடத்தில்

    இந்த சிலை இருக்கும் நர்மதா டேம் அருகாமையில் உள்ள பகுதியில் பல மத கலவரங்களை சந்தித்துள்ளது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிறைய முறை கலவரம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில்தான் தற்போது சிலை நிறுவப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sardar Vallabhbhai Patel statue is just Modi's politcal ego say US medias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X