நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கு.. முழுமையாக விசாரிக்க வேண்டும்.. ஐநா கோரிக்கை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக முழுமையாக முறைப்படி விசாரிக்க வேண்டும் என்று ஐநாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டிபன் டூஜ்ஜாரிக் கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் - ஐநா கோரிக்கை

    சாத்தான்குளம் வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிசிஐடி இந்த வழக்கில் குற்றவாளிகள் எல்லோரையும் கைது செய்தது. லாக்டவுன் நேரத்தில் கடை திறந்ததாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர்.அவர்கள் இருவரும் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    தீவிர விசாரணையை

    தீவிர விசாரணையை

    இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதலில் எஸ்ஐ ராகுகணேஷ் இதில் கைது செய்யப்பட்டார்.அதன்பின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் கைது செய்யப்பட்டனர். அதன்பின் கடைசியாக காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டார்.

    எங்கே உள்ளனர்

    எங்கே உள்ளனர்

    இவர்கள் எல்லோருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. நேறு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்களுக்கு கஸ்டடி காவல் பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் ஐந்து பேர் நீதிமன்ற விசாரணைக்கு பின் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 5 போலீசாரும் பேரூரணி சிறையில் இருந்து தற்போது மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    ஐநா கருத்து

    ஐநா கருத்து

    இது தொடர்பாக தற்போது ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது. ஐநாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டிபன் டூஜ்ஜாரிக் கருத்து தெரிவித்துள்ளார். எல்லா கொலைகள், மரணங்களும் விசாரிக்கப்பட வேண்டும். முறைப்படி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இதையும் கண்டிப்பாக முறைப்படி விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    சிபிஐ

    சிபிஐ

    தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இதற்காக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய எதுவாக திருநெல்வேலி விருந்தினர் மாளிகையில் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று கோவில்பட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தியது. ஜெயராஜ் உறவினர்களிடம் முக்கியமான ஆதாரங்களை சிபிஐ சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sathankulam Death: It should be investigated fully says UN on the case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X