நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியானது அமேசான் பெஸோசின் அந்த அந்தரங்கம்.. உலகின் நம்பர் 1 பணக்காரர் போனை ஹேக் செய்த சவுதி சல்மான்

நியூயார்க்: அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ் ஆப் மூலம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்தது அம்பலம் ஆகியுள்ளது.இந்த கட்டுரையை படிக்கும் முன் அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப

Google Oneindia Tamil News

Recommended Video

    Saudi Salmon hacked Amazon Jeff Bezos's phone | அமேசான் நிறுவனரின் போனை ஹேக் செய்த சவூதி ?

    நியூயார்க்: அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ் ஆப் மூலம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்தது அம்பலம் ஆகியுள்ளது.

    இந்த கட்டுரையை படிக்கும் முன் அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பெஸோஸ் குறித்து நீங்கள் மூன்று முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் அமேசான் மட்டுமின்று வேறு சில நிறுவனங்களுக்கும் அதிபராக இருக்கிறார்.

    அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கும் ஜெப் பெஸோஸ்தான் அதிபர். கடந்த சில வருடங்களுக்கு முன் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை அவர் மொத்தமாக வாங்கினார்.

    என்ன கடுப்பு

    என்ன கடுப்பு

    இரண்டாவது வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் உலகம் முழுக்க உள்ள அரசியல் குறித்து நேர்மையாக செய்தி வெளியிடும். இதனால் பல நாட்டு தலைவர்கள் வாஷிங்டன் போஸ்ட் மீதும், அதன் தலைவர் ஜெப் பெஸோஸ் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெப் பெஸோஸ் மீது கோபத்தில் உள்ளார், மோடி குறித்த தவறாக எழுதியதால், இந்தியா வந்த ஜெப் பெஸோஸை பிரதமர் மோடி சந்திக்கவே இல்லை.

    சல்மான்

    சல்மான்

    ஆம், அந்த அளவிற்கு ஜெப் பெஸோஸ் மீது பல நாட்டு தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். மூன்றாவது இவர்களின் கோபத்தை விட, ஜெப் பெஸோஸ் மீது சவுதியின் முடி இளவரசர்தான் செம கோபத்தில் உள்ளார். உலகின் சிறந்த பத்திரிக்கையாளர் என்று பார்க்கப்பட்ட ஜமால் கசோக்கி, சல்மான் குறித்து தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டில் தீவிரமாக கட்டுரைகளை எழுதி வந்தார்

    கசோக்கி கட்டுரை

    கசோக்கி கட்டுரை

    இதை பல முறை சல்மான் மறைமுகமாக தடுக்க முயன்றார். ஆனால் ஜெப் பெஸோஸ் கசோக்கிக்கு ஆதரவாக பேசி வந்தார். சல்மான் குறித்து தினமும் பல அதிரடி கட்டுரைகளை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. இதனால் கோபம் அடைந்த சவுதி ஜமால் கசோக்கியை தீர்த்து கட்ட முடிவு செய்தது .

    கசோக்கி கொலை

    கசோக்கி கொலை

    சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். அமெரிக்காவில் வசித்து வந்த இவர் கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்த போது கொல்லப்பட்டார். இவரது கொலைக்கும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருப்பது பின் சவுதி மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

    கொலை செய்தனர்

    கொலை செய்தனர்

    ஆம், காசோக்கி எழுதிய கட்டுரைகளால் சவுதி அவரை தீர்த்து கட்டியது. அதுவும் உடலை வெட்டி பிரேக்கிங் பேட் சீரியசில் வருவது போல, மொத்தமாக அமிலத்தை வைத்து அவரின் உடலை கரைத்து உள்ளனர். கசோக்கி உடலில் சிறிய பீஸ் கூட யாருக்கும் இதுவரை கிடைக்கவில்லை.

    பழி வாங்க முடிவு

    பழி வாங்க முடிவு

    காசோக்கி கதையை முடிந்த பின்பும் கூட, சல்மானுக்கு கோபம் தீரவில்லை. ஆம், வாஷிங்டன் போஸ்ட் தலைவர் ஜெப் பெஸோஸை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று சல்மான் முடிவு செய்தார். இந்த நிலையில்தான் அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ் ஆப் மூலம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்தது அம்பலம் ஆகியுள்ளது.

    திருமணம் எப்படி

    திருமணம் எப்படி

    அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் திருமண முறிவிற்கும் சல்மானுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் அறிவிக்கப்பட்டார். ஆனால் சில நாட்களில் அவரின் மனைவி அவரை விவாகரத்து செய்தார். இதனால் அவரின் சொத்துக்களில் சில அவரின் மனைவிக்கு சென்றது.

    காரணம் யார்

    காரணம் யார்

    இந்த மணமுறிவிற்கு காரணம் சல்மான்தான். ஜெப் பெஸோஸ் குறித்து வெளியான சில அந்தரங்க போட்டோக்கள்தான் ஜெப் பெஸோஸ் மணமுறிவிற்கு காரணம். இந்த போட்டோக்களை பார்த்த பின்தான் ஜெப் பெஸோசை அவரது மனைவி விவாகரத்து செய்தார். ஜெப் பெஸோஸ் போனில் இருந்த இந்த போட்டோக்களை சல்மான்தான் ஹேக் செய்து வெளியிட்டுள்ளார்.

    என்ன ரிப்போர்ட்

    என்ன ரிப்போர்ட்

    கடந்த வருடம் ஜெப் பெஸோஸ், கெவின் டி பெக்கர் என்ற பிரபல துப்பறியும் நிபுணரை அழைத்து, இந்த புகைப்படங்கள் லீக் ஆனது எப்படி என்று விசாரிக்க சொன்னார். கடந்த ஒரு வருடமாக இந்த விசாரணை நடந்து வந்தது. இதில்தான் தற்போது திடுக்கிடும் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

    நேரடி ஹேக்

    நேரடி ஹேக்

    துப்பறிவாளர் கெவின் டி பெக்கர் தன்னுடைய ரிப்போர்ட்டை பொதுவில் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜெப் பெஸோஸ் செல்போனை சவுதி அரசு ஹேக் செய்து இருக்கிறது. முகமது பின் சல்மானின் நேரடி கண்காணிப்பில் இந்த ஹேக் நடந்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் கட்டுரைகளுக்கு பதிலடியாக இந்த ஹேக் நடந்துள்ளது.

    வாட் சாவ்

    வாட் சாவ்

    அவர்கள்தான் அந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு, விவாகரத்து ஏற்பட செய்து இருப்பது என்று ரிப்போர்ட் வெளியிட்டுள்ளார். ஜெப் பெஸோஸ் ஜெப் பெஸோசூக்கும வேறு ஒரு பத்திரிகையாளக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த கள்ள தொடர்பு போட்டோகளைத்தான் சல்மான் வெளியிட்டுள்ளார்.

    மாஸ் பின்னணி

    மாஸ் பின்னணி

    ஜெப் பெஸோஸ் போனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு வைரஸ் மெசேஜ் அனுப்பி, அதில் இருந்த புகைப்படங்களை சல்மான் நேரடியாக திருடி உள்ளார். பின் இதை வேறு சில நபர்கள் வைத்து ஜெப் பெஸோஸ் மனைவிக்கு அனுப்பி அவர்களின் வாழ்க்கையை முடித்துள்ளனர். இது மாபெரும் பழி வாங்கும் நடவடிக்கை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    நிலைமை

    நிலைமை

    இந்த ரிப்போர்ட் பொதுவில் வெளியாகி இருக்கிறது. இதை குறித்து அவர் வரிசையாக நிறைய கட்டுரைகளை எழுதி உள்ளார். ஆனால் ஜெப் பெஸோஸ் இதுகுறித்து இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. உலகின் நம்பர் ஒன் பணக்காரருக்கே இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Saudi Salmon hacked Amazon Jeff Bezos's phone using Whats app virus to take revenge on his for the Washington Post articles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X