நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏலம் விடப்பட்ட மேயர் பதவி.. அதிகத் தொகை கொடுத்து வாங்கிய 7 மாதக்குழந்தை.. கொள்கை என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஏழு மாத சிறுவன் ஒருவன் அமெரிக்காவில் மேயராக நியமிக்கப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கிறது ஒயிட்ஹால் சமூக மையம். இந்த மையத்தின் மேயர் பதவி ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படும். யார் அதிக தொலைக்கு ஏலம் கேட்கிறார்களோ, அவர்களுக்கு மேயர் பதவி வழங்கப்படும்.

seven month old baby becomes mayor in america

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மேயர் பதவி ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சாட் - நான்சி தம்பதியினர், தங்கள் மகன் சார்லிக்காக மேயர் பதவியை ஏலம் கேட்டனர். அவர்கள் அதிக தொகைக்கு ஏலம் கேட்டதால், ஏழு மாத கைக்குழந்தையான சார்லிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்து அமெரிக்காவின் குட்டி மேயராக சார்லி பதவி ஏற்றுக்கொண்டான். சார்லியின் கொள்கை, அமெரிக்காவை மீண்டும் கருணையுள்ள நாடாக மாற்றுவது தானாம். இந்த செய்தி தான் இப்போது அமெரிக்காவின் ஹாட் நியூஸ்.

English summary
Every year the position of mayor is auctioned off at the Whitehall Volunteer Fire Department BBQ Fundraiser.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X