என்ன ஓமிக்ரான் இப்படி எல்லாம் பரவுதா! அப்போ கவனமா இருக்கணும்.. அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை!
நியூயார்க்: அமெரிக்காவில் ஓமிக்ரான் கேஸ்கள் விடாமல் அதிகரிக்க சில முக்கிய காரணம் இருப்பதாக அந்நாட்டு மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் முக்கியமான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. அங்கு இரண்டாம் அலை பரவலுக்கு டெல்டா காரணமாக இருந்தது. இந்த நிலையில் மூன்றாம் அலை பரவல் ஓமிக்ரான் கொரோனா மூலம் ஏற்பட்டு வருகிறது.
ஸ்கூலுக்கு வாங்க.. மகாராஷ்டிராவில் 4 நாட்களில் திறக்கப்படும் பள்ளிகள்.. தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் கடந்த 2 வாரம் முன்பு 10 லட்சம் என்ற அளவில் இருந்தது. இப்போது தினசரி கேஸ்கள் 7 லட்சம் என்ற அளவில் பதிவாகி வந்தாலும் இன்னும் கேஸ்கள் பெரிய அளவில் குறையவில்லை. அங்கு 25,035,097 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ஆக்டிவ் நோயாளி
அமெரிக்காவில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 4-5 லட்சம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா அலை இப்போதைக்கு முடிவுக்கு வரும் அறிகுறிகள் தெரியவில்லை என்று அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. மூன்றாம் அலைக்கு இதுதான் காரணம்.

ஓமிக்ரான் கேஸ்கள்
ஓமிக்ரான் கேஸ்கள் எப்படி பரவுகிறது என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவ முக்கிய காரணம் கழிவு நீர்தான். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மூலம்தான் ஓமிக்ரான் அதிக அளவில் பரவுகிறது. கொரோனா நோயாளிகளின் கழிவுகள், அவர் குளிக்கும் போது வெளியேறும் தண்ணீர் இதன் மூலம் கொரோனா பரவுவதாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி கழிவு நீரில் கொரோனா வைரஸ் அதிக அளவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கேஸ்கள் அதிகரிக்கிறது
இதன் மூலம்தான் அமெரிக்காவில் பல மாகாணங்களில் தொடர்ந்து கேஸ்கள் அதிகமாக பரவுகிறது. கழிவு நீரில் இருக்கும் கொரோனா இன்னொரு வீட்டின் கழிவு நீரிலும் கலந்து அதன் மூலம் அவர்களின் கழிவறை மூலம் அங்கு இருப்பவர்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கழிவு நீர் மட்டுமின்றி குடி நீரிலும் இப்படி ஓமிக்ரான் பரவலாம். தண்ணீரில் ஓமிக்ரான் பரவுவதால் கேஸ்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் கொரோனா
2ம் அலையிலும் இப்படி குடிநீரில் கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது. ஒரு பகுதியில் இருக்கும் கழிவு நீரை ஆராய்ந்து அதில் எவ்வளவு கொரோனா வைரல் லோட் இருக்கிறது என்று கண்டுபிடித்தால் அதன் மூலம் அந்த பகுதியில் எந்த அளவிற்கு கொரோனா பரவி உள்ளது என்பதையும் கண்டுபிடிக்க முடியும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதாவது கழிவு நீரில் இருக்கும் வைரல் லோடை வைத்தே ஒரு பகுதியில் எந்த அளவிற்கு கொரோனா பரவி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும் என்று அந்த கட்டுரை கூறியுள்ளது.

ஆய்வு முடிவுக்கு
Biobot Analytics என்று நிறுவனம் கழிவு நீர் குழாய்களில் நடத்திய ஆய்வு மூலம் இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் மொத்தமாக தண்ணீர் மூலம் மாகாணம் முழுக்க கேஸ்கள் உயராது. ஒரு குறிப்பிட்டு கம்யூனிட்டு உள்ளே இப்படி கேஸ்கள் உயரும். மக்கள் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும். கழிவு நீர் வெளியேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.