நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானில் தெரிந்த மர்ம சுழல்.. ஸ்பேஸ்ஷிப்பா? ஆண்ட்ரோமெடாவா? குழம்பிய மக்கள்! விஞ்ஞானிகள் தந்த விளக்கம்

சூரிய குடும்பத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு கிரகத்திலும்/விண்கள்/நிலவுகளிலும் உயிர்கள் வாழ்வதற்கான ஆதாரம் இருப்பதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒருசில நாட்களுக்கு முன்னர் இரவு நியூசிலாந்து மக்கள் சிலர் வானத்தில் 'பால்வெளி அண்டம்' போன்ற ஒரு உருவத்தை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விண்வெளி ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த 18ம் தேதியன்று இரவு வழக்கம் போல மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி இருக்கையில், நியூசிலாந்தில் ரயிலில் பயணம் செய்தோர், மலை பகுதிகளில் குடியிருந்தோர் என குறிப்பிட்ட சிலர் மட்டும் வானில் ஒரு சுழல் வடிவ தோற்றத்தை பார்த்திருக்கிறார்கள். இந்த தோற்றம் குறித்து பிறரிடம் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததால் மற்றவர்களால் இதனை பார்க்க முடியவில்லை.

எனவே இது புரளி அல்லது வதந்தி என்று கருதினர். ஆனால் அடுத்த நாள் காலையில் செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் இந்த சுழல் வடிவம் தொடர்பான புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் இதற்கான காரணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே மக்கள் இதனை ஏலியனின் ஸ்பேஸ்ஷிப் என்று நினைத்தனர். இது பற்றிய விவாதங்களும் மேலெழுந்தன. அப்படி இருக்கையில்தான் 20ம் தேதி ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தைச் சேர்ந்த 'சுபாரு' (Subaru) தொலைநோக்கி நிலையத்தின் அதிகாரிகள் இது குறித்து விளக்கமளித்திருந்தனர்.

உங்க எக்ஸ் மேல கோபமா? காதலர் தினத்தில் கரப்பான்களுக்கு பெயரிட.. மிருகக்காட்சி சாலை அழைப்பு! உங்க எக்ஸ் மேல கோபமா? காதலர் தினத்தில் கரப்பான்களுக்கு பெயரிட.. மிருகக்காட்சி சாலை அழைப்பு!

சுபாரு

சுபாரு

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் வானியல் ஆய்வகம் ஒன்று அமைந்திருக்கிறது. இங்குதான் 'சுபாரு' தொலைநோக்கி இருக்கிறது. மக்கள் பார்த்ததாக சொன்ன இதே சுருள் வடிவ வெளிச்சத்தை தொலைநோக்கி கேமிராக்களும் படம்பிடித்துள்ளது. இதனை ஆராய்ந்த ஆய்வாளர்கள் இது ஸ்பேஸ்ஷிப் கிடையாது, சாதாரண ராக்கெட்தான் என்று கூறினர். மாதம் ஒரு முறையோ அல்லது அதற்கும் மேற்பட்ட முறையோ உலகம் முழுவதும் ஏதாவது ஒரு மூலையிலிருந்து ராக்கெட்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படி அனுப்பப்படும் ராக்கெட் எல்லாம் 'சுழல்' வடிவத்தில் தெரிவதில்லையே என என்று நெட்சன்கள் கேள்வியெழுப்பினர்.

ஃபால்கன் 9 ராக்கெட்

ஃபால்கன் 9 ராக்கெட்

இதற்கு பதிலளித்த சுபாரு, "அமெரிக்காவின் விண்வெளி படைக்காக கடந்த 18ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சில செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல பயணித்தது. இதற்காக ஃபால்கன் 9 எனும் ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. இந்த ராக்கெட்தான் வானிலை தெரிந்த சூழல் வடிவத்திற்கு காரணம்" என்று கூறியிருந்தது. அதாவது ஃபால்கன் 9 ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன செயற்கைக்கோளாகும். இது உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், 'Fly to space and back with SpaceX' என்பதுதான். அதாவது ஸ்பேஸுக்கு (விண்வெளிக்கு) சென்று மீண்டும் ஸ்பேஸ் எக்ஸுக்கு திரும்புவது என்பதுதான்.

சுழல் வடிவம்

சுழல் வடிவம்

இப்படி மீண்டும் பூமிக்கு திரும்பும் போது சரியாக தரையிறங்க வேண்டும். எனவே இந்த ராக்கெட் தன்னை தானே சரியான நிலைக்கு கொண்டு வரும். இந்த செயல்பாட்டின்போது ராக்கெட் சுழலும். சுழற்சிக்கு என்ஜினின் சில பாகங்கள் மட்டும் வேலை செய்யும். படகுகளின் பின்புறத்தில் இருக்கும் என்ஜினை வலதுபுறம் திருப்பினால் படகு இடதுபுறம் திரும்பும் அல்லவா அதுபோலதான் இந்த என்ஜினின் பாகங்கள் வேலை செய்து ராக்கெட்டை சரியான கோணத்திற்கு கொண்டுவரும். இந்த செயல்பாட்டின் போது வெளியிடப்படும் எரிபொருள்தான் பூமியிலிருந்து பார்ப்பதற்கு சுழல் வடிவில் தெரிய காரணம்.

தனிமை

தனிமை

மட்டுமல்லாது என்ஜின் முனையில் சீரான அழுத்தத்தில் இருக்கும் எரிவாயு அதை விட அழுத்தம் அதிகம் உள்ள விண்வெளியில் வெளியேறும் போது அது சூரிய ஒளியில் பட்டு நமது கண்களுக்கு ஒரு வட்டம் போல காட்சியளிக்கிறது என்று சான் அன்டோனியோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இந்த சூரிய குடும்பத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த கிரகத்திலும்/விண்கள்/நிலவுகளிலும் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரத்தை நாம் உறுதி செய்யவில்லை. மிகச்சரியாக சொல்வதெனில் சூரிய குடும்பத்தில் நாம் மட்டும்தான் தனியாக இருக்கிறோம். இப்படி இருக்கையில் இல்லாத ஏலியனை பார்த்து பயப்படுவதில் அர்த்தமில்லை.

English summary
A few days ago some New Zealanders were surprised to see a 'Milky Way'-like figure in the sky at night. This caused great debate. In this case, space explorers have explained about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X