நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா கார் தற்போது சூரியனை முழுதாக ஒருமுறை சுற்றி வந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்..எலோன் மஸ்க் புது சாதனை!- வீடியோ

    நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா கார் தற்போது சூரியனை முழுதாக ஒருமுறை சுற்றி வந்துள்ளது. இதன் மூலம் சூரியனை சுற்றி வந்த கார் என்ற பெருமையை அந்த கார் பெற்றுள்ளது.

    அமெரிக்காவில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த தனியார் நிறுவனம் 'எலோன் மஸ்க்' என்ற கோடிஸ்வரருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.

    நாசாவை விட இந்த நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய நிறுவனம் ஆகும். கடந்த 2018 வருடம் பிப்ரவரி மாதம் எலோன் மாஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டை அனுப்பியது.

     என்ன ராக்கெட்

    என்ன ராக்கெட்

    உலகின் பெரிய ராக்கெட்டான ''ஃபல்கான் ஹெவி'' என்ற ராக்கெட் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையை செய்தது.இந்த ராக்கெட்டில் டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தமான ரெட் கலர் கார் ஒன்று இருந்தது. இதில் சாட்டிலைட் எதுவும் இல்லை. இந்த காரின் விலை 90 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை இருக்கும்.

    டெஸ்லா எப்படி

    டெஸ்லா எப்படி

    இந்த டெஸ்லா நிறுவனமும் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ராக்கெட்டில்தான் அந்த டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் இருந்தது. இது எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான அவர் பயன்படுத்திய கார் ஆகும்.

    செவ்வாய் முக்கியம்

    செவ்வாய் முக்கியம்

    தற்போது அது வானத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது செவ்வாய் கிரகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது.இந்த காரில் நிறைய சிறப்பம்சம் இருக்கிறது. ரோட்ஸ்டெர் என்று இதற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள். இதில் ஒரு ரோபோவை வெறுமனே அமர்த்தி உள்ளனர்.

    ஸ்டார்மேன் சுற்றுகிறது

    ஸ்டார்மேன் சுற்றுகிறது

    இதற்கு ஸ்டார்மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக இது செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த காருக்குள் அனைத்துப் பக்கமும் பெரிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமரா மூலம் பூமிக்கு புகைப்படம் அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    நல்ல கார் இது

    நல்ல கார் இது

    வீடியோவும் அனுப்பப்பட்டு வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் இதன் மூலம் நிறைய முக்கியமான புகைப்படங்களை பெற்றுள்ளது. அதே சமயம் அந்த காரில் ஏலியனுக்கு மெசேஜ் ஒன்று இருக்கிறது. காரில் அனைத்து சர்க்யூட் போர்டுகளிலும் ''இது பூமியில் மனிதனால் தயாரிக்கப்பட்டது'' என்று எழுதி இருக்கிறது. ஸ்பேஸுக்கு அனுப்பப்பட்ட முதல் 'மேட் இன் எர்த்' இதுதான்.

    செவ்வாய்

    செவ்வாய்

    இந்த கார் தற்போது பூமியில் இருந்து 180 மில்லியன் மைல்கல் தூரம் உள்ளது. அதேபோல் இது ஏற்கனவே சூரியனை ஒருமுறை முழுதாக சுற்றி வந்துவிட்டது. தற்போது இது ஒரு மணி நேரத்திற்கு 41,236 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இது செவ்வாய் கிரகத்தில் இருந்து 69,170,000 மைல்கல் தொலைவில் உள்ளது.

    நீள்வட்ட பாதை

    நீள்வட்ட பாதை

    பூமி, சூரியன் இரண்டையும் சேர்த்து நீள்வட்ட பாதையில் இது சுற்றிக்கொண்டு இருக்கிறது. வியாழன் கிரகத்திற்கும் செவ்வாய் கிரகத்திற்கு இடையில் இது அதிக நாட்கள் சுற்றும். அதன்பின் இது செவ்வாயை நோக்கி சில மாதங்களில் செல்லும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சூரியன் நெருக்கம்

    சூரியன் நெருக்கம்

    இது இப்போது சூரியனை முழுதாக ஒருமுறை சுற்றியுள்ளது. அதே சமயம் செவ்வாயை அடையும் முன் இந்த கார் வெள்ளி மீது மோத 2 சதவிகித வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதேபோல் அதிகபட்சம் 1 வருடத்திற்குள் மொத்தமாக நொறுங்கி உடையவும் வாய்ப்பு உள்ளது.

    உடையும்

    உடையும்

    ஆம் இது செவ்வாயை நெருங்கியவுடன் மொத்தமாக நொறுங்கி உடைந்து தூசாக மாற வாய்ப்புள்ளது. செவ்வாயில் நிலவும் வெப்பநிலை மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    English summary
    Space X's starman Tesla car has already completed a full orbit around the sun will march to Mars soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X