9 வருட கனவு.. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள்.. பெரும் வெற்றி!
நியூயார்க்: நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் மழை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இரண்டு வீரர்கள் செல்கிறார்கள்
நாசாவின் இரண்டு வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பி உள்ளது. நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் விண்ணுக்கு பறந்தவர்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். அனுபவத்தின்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விண்வெளி மையத்தில் முக்கியமான ஆராய்ச்சிகளை செய்ய யிருக்கிறார்கள்.

நாசா கூட்டணி
2003ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால், நாசா தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி முடிவு செய்தது. இதனால் நாசா விண்வெளி வீரர்களை தானாக அனுப்புவது இல்லை. இந்த நிலையில்தான் நாசாவுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது. நாசாவுடன் இணைந்த முதல் தனியார் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஆகும்.

எப்படி செல்லும்
ஃபல்கான் 9 ராக்கெட்டில் மூலம் இவர்கள் விண்ணுக்கு சென்று உள்ளனர். இதில் இரண்டு ஸ்டேஜ் உள்ளது.
முதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறந்தது. இதுதான் ராக்கெட்டை விண்ணுக்கு கொண்டு சென்றது. அதன்பின் அந்த பகுதி தனியே கழன்று கீழே பாதுகாப்பாக எஞ்ஜின் உதவியுடன் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறந்தது. இது ராக்கெட்டை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று கொண்டது.

க்ரூ டிராகன் பகுதி
இதன் முன்பக்கம் கூம்பு போன்ற பகுதி இருக்கும். இதில் தான் வீரர்கள் இருப்பார்கள். இதை க்ரூ டிராகன் (Crew Dragon) பகுதி என்று அழைப்பார்கள். இதில்தான் வீரகேரல் இருப்பார்கள். ராக்கெட்டில் இருந்தும் இரண்டு ஸ்டேஜ் முடிந்த பின் க்ரூ டிராகன் தனித்து விடப்பட்டது. இதில் இருக்கும் திரஸ்டர் மூலம் அவர்கள் விண்வெளி மையத்திற்கு செல்லும். சிறு சிறு எஞ்சின்கள் மூலம் அது மெல்ல மெல்ல ஸ்பேஸ் ஸ்டேசன் நோக்கி நகரும். அங்கு இருக்கும் வாயில் ஒன்றில் சரியாக இந்த க்ரூ டிராகன் இணையும்.

ராக்கெட் வெடித்தால்
ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின் அது வெடித்து சிதறி ருந்தாலும் எந்த பிரச்சனையும் ஆகி இருக்கிறது. இப்படி ராக்கெட் வெடித்து சிதறினால் இந்த முறை வீரர்கள் யாரும் பலியாக மாட்டார்கள். ஏனென்றால் ராக்கெட் வெடித்த அடுத்த நொடியில், அதில் இருந்து க்ரூ டிராகன் (Crew Dragon) பிரிந்து சென்று விடும். இதனால க்ரூ டிராகனுக்கு (Crew Dragon) எதுவும் பாதிப்பு ஏற்படாது. உடனே க்ரூ டிராகன் (Crew Dragon) இயக்கப்பட்டு அது தனியாக பறந்து சென்றுவிடும். இதன் மூலம் க்ரூ டிராகன் (Crew Dragon)ல் இருக்கும் வீரர்கள் பாதுகாக்கப்படுவர்கள்.

எப்போது நடக்கும்
நாளை இரவு 8.30 மணிக்கு இவர்கள் இருவரும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் புறப்பட்டுள்ளது. 2011ல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இல்லை. ரஷ்யாவின் சோயஸ் விண்வெளி ராக்கெட்டைதான் நாசா நம்பி இருக்கிறது.

சோயஸ் விண்கலம்
சோயஸ் விண்கலத்திற்கு கோடி கோடியாக பணம் கொடுத்து நாசா விண்ணுக்கு வீரர்களை அனுப்பியது. தற்போது ஸ்பேஸ் எக்ஸ் உடன் நாசா சேர்ந்துள்ளது . சர்வதேச விமான நிலையத்தில் இந்த இரண்டு வீரர்கள் நிறைய ஆராய்ச்சிகளை செய்வார்கள். அதிக பட்சம் 2 மாதம் இவர்கள் விண்வெளியில் இருப்பார்கள். ஆனால் அதற்கு முன்பே கூட இவர்கள் திரும்ப வாய்ப்புள்ளது.

நிறுவனம் என்ன
அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலோன் மஸ்க் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ஆன இவர்தான் கடந்த 2018ம் வருடம் செவ்வாய் கிரேக்கத்திற்கு தனது டெஸ்லா காரை அனுப்பினார்.உலகின் முன்னணி விண்வெளி ஆராய்சசி நிறுவனமாக தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்புகிறது.