நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்று ஒரே நாளில் 60 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்று ஒரே நாளில் 60 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. பெரிய திட்டத்தை மனதில் வைத்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.

Recommended Video

    ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் - வீடியோ

    டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கிற்கு இது பொற்காலம் என்றுதான் கூற வேண்டும். உலகமே கொரோனா வைரஸால் முடங்கி இருக்கும் நிலையில், எலோன் மஸ்க் மட்டும் வரிசையாக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறார்.

    கடந்த வாரம்தான் ஸ்பேஸ் எக்ஸின் பல்கான் 9 ராக்கெட் மூலம் 2 நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் பாதுகாப்பாக விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆராய்ச்சி பணிகளை செய்து வருகிறார்கள்.

    டிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி!டிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி!

    இன்று ராக்கெட்

    இன்று ராக்கெட்

    இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்று ஒரே நாளில் 60 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. பெரிய திட்டத்தை மனதில் வைத்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு Starlink internet satellites என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல்கான் 9 ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட்கள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இன்று காலை இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

    எங்கிருந்து ஏவினார்கள்

    எங்கிருந்து ஏவினார்கள்

    கேப் கனவரேல் ஏர்போர்ஸ் மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. Starlink internet satellites திட்டத்தின் 8வது ராக்கெட்டு ஏவுதல் திட்டம் ஆகும் இது. இதற்கு முன் 7 முறை இதேபோல் கொத்து கொத்தாக செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பியது. இதுவரை மொத்தம் 422 செயற்கைகோள்களை Starlink internet satellites திட்டம் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த செயற்கைகோள்கள் எல்லாம் இணையம் வழங்கும் செயற்கைகோள்கள் ஆகும். மொத்தமாக 12000 செயற்கைகோள்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுக்க மூலை முடுக்கெல்லாம் இணையத்தை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது. 400 செயற்கைகோள்கள் மூலம் அடிப்படை இணைய சேவையும், 800 செயற்கைக்கோள்கள் மூலம் வேகமான இணைய சேவையையும் ஸ்பேஸ் எக்ஸ் வழங்கும்.

    இன்னும் பல வருடம்

    இன்னும் பல வருடம்

    மொத்தமாக இந்த திட்டம் முடிய இன்னும் பல வருடங்களாகும். தற்போது உலகிலேயே அதிக செயற்கைகோள்கள் கொண்ட தனியார் நிறுவனம் என்ற சிறப்பை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த செயற்கைகோள்கள் நட்சத்திர ஆராய்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இத்தனை செயற்கைகோள்கள் மேலே பறப்பது ஆபத்தானது என்கிறார்கள்.

    தீர்வு

    தீர்வு

    இதனால் இந்த 60 செயற்கைகோள்களிலும் சூரிய ஒளி படாத வகையில் ஷீல்ட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதை VisorSat என்று அழைக்கிறார்கள். இதனால் விண்வெளி ஆராய்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இன்று அனுப்பப்பட்ட Starlink internet satellites அனைத்தும் வெற்றிகரமாக வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுக்க இணையம் வழங்கும் திட்டத்தில் முதல் கட்ட வெற்றியை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது.

    English summary
    Space X sends 60 Satellites in single rocket Falcon 9 for Mega Starlink Project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X