நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் நாளிலா இப்படி? வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் ஷாக்கிங்

Google Oneindia Tamil News

நியூயார்க்: விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இரண்டு நாசா வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப உள்ள அதே நாளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி இருக்கிறது.

Recommended Video

    Space X ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 Nasa வீரர்கள்

    நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்னும் சற்று நேரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.

    நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் விண்ணுக்கு செல்கிறது. தற்போது கவுண்டவுன் நடந்து வருகிறது.

    வெடித்தது

    வெடித்தது

    இந்த நிலையில் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இரண்டு நாசா வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப உள்ள அதே நாளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று வெடித்து சிதறி இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ராக்கெட் ஆகும் இது. இதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் என்று பெயர் வைத்துள்ளது. இதை வைத்து ஸ்பேஸ் எக்ஸ் சோதனைகளை செய்து வருகிறது.

    சோதனை செய்தது

    இதுவரை இதை மூன்று முறை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சோதனை செய்துள்ளது. மூன்று முறையும் இந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இரண்டு முறை வெடித்து சிதறி உள்ளது. ஒரு முறை பறக்காமல் கீழே விழுந்துள்ளது. இந்த முறை பெரிய அளவில் வெடித்து சிதறி இருக்கிறது. சரியாக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன் இது வெடித்துள்ளது.

    சேதங்கள் இல்லை

    சேதங்கள் இல்லை

    இதனால் ஏவுதளம் இருக்கும் பகுதியில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதற்காக இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட இது வெற்றிபெறவில்லை.

    மனிதர்கள் அனுப்பும்

    மனிதர்கள் அனுப்பும்

    விரைவில் இந்த ஸ்டார்ஷிப் மூலம் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப உள்ளனர். இந்த நிலையில் இன்னொரு பக்கம் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இரண்டு நாசா வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப உள்ளது. இதில் எந்த விதமான மாற்றமுமிருக்காது. எப்போதும் போல இன்று வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வேறு ராக்கெட்டான பல்கான் 9 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

    English summary
    Space X starship broke into pieces on the day of sending 2 NASA Astronauts to ISS with Falcon 9.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X