நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ் வெற்றி.. விண்ணுக்கு சென்ற 2 நாசா வீரர்கள்.. ஐஎஸ்எஸ்-உடன் இணைந்தது ஸ்பேஸ் எக்ஸ் "க்ரூ டிராகன்"!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இருக்கிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் (crew dragon) தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது.

இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டார்கள். இன்று அதிகாலை 1 மணிக்கு இந்த ராக்கெட் அனுப்பப்பட்டது.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாசா இந்த சாதனையை செய்தது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.

இஸ்ரோ எடுத்த பாடம்.. இன்று ஐஎஸ்எஸ்-ல் இணையும் 2 நாசா வீரர்கள்.. 19 மணி நேர விண்வெளி பயணம்!இஸ்ரோ எடுத்த பாடம்.. இன்று ஐஎஸ்எஸ்-ல் இணையும் 2 நாசா வீரர்கள்.. 19 மணி நேர விண்வெளி பயணம்!

ராக்கெட் பறந்தது

ராக்கெட் பறந்தது

மொத்தம் 18 மணி நேர பயணத்தை முடித்துவிட்டு இந்த இரண்டு நாசா வீரர்கள் விண்வெளி ஆராய்சசி மையத்துடன் இணைகிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதில் இருக்கும் முதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறந்தது. அடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறந்தது. இது ராக்கெட்டின் க்ரூ டிராகன் பகுதியை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று விட்டது. அதன்பின் க்ரூ டிராகன் சர்வதேச விண்வெளி மையம் நோக்கி சென்றது.

பயணம் செய்தது

இந்த க்ரூ டிராகன் (Crew Dragon) பகுதியில்தான் நாசா வீரர்கள் இருந்தனர். இது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றியது. பூமியை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி அப்படியே சர்வதேச விண்வெளி மையம் நோக்கி க்ரூ டிராகன் நகர்ந்து சென்றது. க்ரூ டிராகனில் இருக்கும் எஞ்சின் இயக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அது சர்வதேச விண்வெளி மையம் நோக்கி நகர்ந்தது. ஜப்பான் மேலே சர்வதேச விண்வெளி மையம் மிதந்து கொண்டு இருந்த போது, க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேஷன் அருகே சென்றது.

மொத்தமாக இணைந்தது

இந்த நிலையில் இன்று இரவு சரியாக 8.00 மணிக்கு விண்வெளி மையத்துடன் க்ரூ டிராகன் இணைந்தது. க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேசன் உடன் இணைக்கப்பட்ட பின் மொத்தமாக ஏர் லாக் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் உள்ளே சென்று ஆராய்ச்சிகள் செய்வார்கள். இவர்களுக்கு சில உடல் ரீதியான சோதனை செய்யப்பட்ட பின், அவர்கள் பணிகளை தொடங்குவார்கள்.

எல்லாமே தானியங்கி

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணையும் போது வீரர்கள் எந்த விதமான பணியையும் செய்யவில்லை. இந்த அனைத்து பணியையும் க்ரூ டிராகன் ஆட்டோமெட்டிக்காக செய்தது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் க்ரூ டிராகன் தானாக ஸ்பேஸ் ஸ்டேஷன் உடன் இணைந்தது. இதனால் எந்த விதமான தோல்வியும், அசம்பாவிதமும் இதில் ஏற்படவில்லை.

யார் வீரர்கள்

யார் வீரர்கள்

நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் இதற்கு முன்பே விண்ணுக்கு பறந்தவர்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். இவர்களை அதிகமாக இரண்டு மாதங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி செய்ய வாய்ப்புள்ளது. இவர்கள் எத்தனை நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

செம சாதனை

செம சாதனை

9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து இப்படி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து முதல் முதலாக விண்ணிற்கு மனிதர்களை அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். கடைசியாக அமெரிக்கா ஜூலை 8, 2011ல் நாசா மனிதர்களை தங்கள் மண்ணில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது. அதன்பின் இப்போதுதான் அமெரிக்க மண்ணில் இருந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்புகிறது.

English summary
SpaceX's Crew Dragon successfully docked with ISS: 2 Nasa astronauts in space now safely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X