நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரியனில் ஏற்படும் திடீர் "லாக்டவுன்".. நிலநடுக்கம் முதல் எரிமலை வெடிப்பு வரை.. எச்சரிக்கும் நாசா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமி முழுக்க கொரோனா காரணமாக பல நாடுகளில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு இருப்பது போலவே தற்போது சூரியனில் லாக்டவுன் ஏற்பட்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. இதனால் பூமியில் பெரிய அளவில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Sun Lockdown: Sun Entering ‘Solar Minimum’ Stage

    சூரியனில் இருக்கும் ''சன் ஸ்பாட்'' எனப்படும் பகுதிகள்தான் சூரியனின் வெப்பநிலைக்கு மிக முக்கிய காரணம் ஆகும். சூரியனின் பரப்பில் எவ்வளவு சன் ஸ்பாட் இருக்கிறது என்பதை பொறுத்துதான் அது வெளியிடும் வெப்பநிலையில் அளவு மாறுபடும். இந்த சன் ஸ்பாட் அவ்வப்போது அதிகரிக்கவும், அவ்வப்போது குறையவும் வாய்ப்பு உள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டுதான் இந்த சன் ஸ்பாட் மிக அதிகமாக உயர்ந்தது. இதனால் பூமியின் வெப்பநிலை பெரிய அளவில் உலகம் முழுக்க உயர்ந்தது.

    ஆம்பன் புயல் ஆவேசம்.. ஓடிக் கொண்டிருந்த பஸ்சை அப்படியே பின்னோக்கி இழுத்துச் சென்றது.. திக் வீடியோ ஆம்பன் புயல் ஆவேசம்.. ஓடிக் கொண்டிருந்த பஸ்சை அப்படியே பின்னோக்கி இழுத்துச் சென்றது.. திக் வீடியோ

    11 வருடங்களுக்கு ஒருமுறை

    11 வருடங்களுக்கு ஒருமுறை

    இந்த சன் ஸ்பாட் 11 வருடங்களுக்கு ஒருமுறை குறையவும் வாய்ப்புள்ளது. ஆனால் சூரியன் இதனால் மங்காது. மீண்டும் சில மாதங்கள் கழித்து புதிய சன் ஸ்பாட் தோன்றி, சூரியனின் வெப்பநிலையை சமப்படுத்ததும். இந்த சன் ஸ்பாட் குறைந்து சூரியனின் வெப்பநிலை குறைவதை "solar minimum" என்று அழைக்கிறார்கள். இதைத்தான் தற்போது சூரியனில் ஏற்பட போகும் லாக்டவுன் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

    சன் ஸ்பாட் குறையும்

    சன் ஸ்பாட் குறையும்

    இந்த வருடம் சூரியனில் இந்த சன் ஸ்பாட் குறைந்து சோலார் மினிமம் ஏற்பட போகிறது என்று நாசா எச்சரித்துள்ளது. ஆம் இதனால் இந்த வருடம் சூரியன் வெளியிடும் வெப்ப கதிர்களின் அளவு வெகுவாக குறையும். ஆனால் இது எந்த விதத்திலும் பூமிக்கு நன்மை பயக்காது. இதனால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அடுத்த 6 மாதத்திற்கு பூமியில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது .

    என்ன மாதிரியான பாதிப்பு

    என்ன மாதிரியான பாதிப்பு

    இந்த மாதிரி சூரியனில் சன் ஸ்பாட் குறைவதன் மூலம் பூமியிலும் பெரிய அளவில் வெப்பநிலை குறையும். இதனால் குளிர் மிக மோசமாக அதிகரிக்கும். இதனால் பெரிய அளவில் விவசாயம் செய்ய முடியாது. பயிர்கள் வீணாகும். விவசாயம் மொத்தமாக படுக்கும். வறுமை ஏற்படும் என்று நாசா கூறியுள்ளது. சூரியனின் வெப்பநிலை பூமிக்கு குறைவாக வரும். இந்த பிரச்சனையால் பல இடங்களில் நிலநடுக்கம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    வேகமாக குறைந்து வருகிறது

    வேகமாக குறைந்து வருகிறது

    சூரியனில் இருக்கும் சன் ஸ்பாட் இப்போதே வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் பாதிப்பு தெரிய வரும். அதேபோல் சூரியனின் மின்காந்த புலம் இதனால் பாதிக்கப்படும். இது சூரியனின் பலத்தை குறைக்கும். இதனால் காஸ்மிக் கதிர்கள் அதிகமாக பூமிக்கு வரும். ஆகவே தொலைத்தொடர்பு சாதனங்கள் இதனால் பாதிக்கும். தொழில்நுட்ப சாதனங்களில் பெரிய அளவில் சிக்னல் பிரச்சனை தொடங்கி தொழில்நுட்ப கோளாறு வரை ஏற்படும்.

    எப்படி எல்லாம் பாதிக்கும்

    எப்படி எல்லாம் பாதிக்கும்

    இதனால் அதிக அளவில் வரும் நாட்களில் மின்னல் தாக்குதல்கள் ஏற்படும். விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஏற்கனவே இதேபோல் பூமியின் டால்டன் மினிமம் என்ற பாதிப்பு ஏற்பட்டது. 1790 மற்றும் 1830 வருடங்களில் இதேபோல் சூரியனில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போதும் வெப்பநிலை குறைவு, குளிர், வறுமை, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற பாதிப்புகள் பூமியில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எரிமலை வெடிப்பு

    எரிமலை வெடிப்பு

    வேகமாக திடீர் என்று பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் வரை குறையும். இதனால் உணவு உற்பத்தி பாதிக்கும் . எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். 1815ல் ஏற்பட்ட இந்தோனேசியா எரிமலை வெடிப்பிற்கு இதுதான் காரணம். அப்போது அங்கு 71 ஆயிரம் பேர் பலியானார்கள். அதே பாதிப்பை நாம் தற்போது எதிர்கொண்டு இருக்கிறோம் என்று நாசா கூறியுள்ளது.

    1816ல் இதே விஷயம் நடந்தது

    1816ல் இதே விஷயம் நடந்தது

    இதேபோல் 1816ல் சூரியன் வெப்பநிலை குறைந்தது. அப்போது வெயில் காலம் ஏற்படவே இல்லை. வெயில் காலத்திலும் உலகம் முழுக்க பல இடங்களில் பனி பெய்தது . உலகம் குளிரில் நடுங்கியது. அதேபோல் மீண்டும் ஏற்படலாம் . இதனால் பூமிக்கு மேலே சுற்றும் சாட்டிலைட்டுகளில் சில பிரச்சனை ஏற்படும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உலகமே நடுங்கி போய் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சனை பூமிக்கு வந்துள்ளது .

    English summary
    Sun also Entered into lockdown: May cause huge trouble to the environment says NASA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X