நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூகுள் தாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனார் சுந்தர் பிச்சை.. குவியும் பாராட்டுகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுந்தர் பிச்சையின் பதிவிற்கு பலரும் பாராட்டு !

    நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆல்ஃபாபெட் நிறுவனமானது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக உள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

    உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 5-ஆவது நிறுவனமாக இது கருதப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜும், சேர்ஜே பிரின்னும் தலைமை பதவியில் இருந்து வந்தனர்.

    சுந்தர் பிச்சை நன்றி

    சுந்தர் பிச்சை நன்றி

    இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை நன்றி தெரிவித்துள்ளார்.

    நன்றி

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக நியமித்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக லேரிக்கும் சேர்ஜேவக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    நல்ல முறை

    நல்ல முறை

    நம்மிடம் நேரம் காலமற்ற பணி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு கலாசாரமும் உள்ளது. எனவே நிறுவனத்தை மேலும் நல்ல முறையில் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

    ஐஐடி

    ஐஐடி

    தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னை ஐஐடியில் படித்தவர். தற்போது மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sundar Pichai takes over as CEO for Alphapet technology company which is Google's parent firm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X