நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கீழே இருக்கும் நபர்".. ஆஸி. பிரதமர் பற்றி பேட்டியில் உளறிய பிடன்.. பெரும் சர்ச்சை- டிமென்ஷியாவா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குறித்து அமெரிக்க அதிபர் பிடன் பேட்டி ஒன்றில் உளறியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்தே பிடனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அமெரிக்காவில் வைக்கப்பட்டு வருகிறது. ஆசியாவில் ரஷ்யா, சீனாவின் வெற்றியாக தாலிபான் வெற்றி பார்க்கப்படுகிறது. முக்கியமாக சீனாவிற்கு தாலிபானின் வெற்றி பெரிய அளவில் பலன் அளிக்க போகிறது.

இந்த நிலையில்தான் சீனாவை கட்டுப்படுத்தும் வகையில் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உறவை புதுப்பித்து வருகிறது. அதன்படி ஆஸ்திரேலியாவுடன் நேற்று அமெரிக்கா அணு ஆயுத நீர்முழ்கி கப்பலுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதனால் ஆஸ்திரேலியா அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலைகளை கொண்ட நாடாக உருவெடுத்து உள்ளது.

அடுத்த 24 - 36 மணி நேரத்தில்.. காபூலில் இன்னொரு தாக்குதல் நடக்கலாம்.. ஜாக்கிரதை: பிடன் எச்சரிக்கை அடுத்த 24 - 36 மணி நேரத்தில்.. காபூலில் இன்னொரு தாக்குதல் நடக்கலாம்.. ஜாக்கிரதை: பிடன் எச்சரிக்கை

பிடன் மறந்துவிட்டார்

பிடன் மறந்துவிட்டார்

நேற்று நடந்த இந்த மீட்டிங்கின் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் அதிபர் பிடன் ஆஸ்திரேலியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து பேசினார். இதற்காக வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங்கில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இருந்தனர். இந்த ஸ்கிரீனை காட்டி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு நன்றி.. எனக்கு இது பெருமை அளிக்கிறது. அமெரிக்க நட்பு நாடுகளின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்று பிடன் குறிப்பிட்டார்.

குழப்பம்

குழப்பம்

பேச்சை தொடர்ந்த பிடன்.. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நன்றி.. அதோடு ஆஸ்திரேலிய பிரதமர் என்று கூறிவிட்டு.. அவரின் பெயரை பிடன் மறந்துவிட்டார். என்ன பெயர் சொல்வது என்று தெரியாமல்.. ஸ்கிரீனில் "கீழே இருக்கும் நபருக்கு நன்றி.. நண்பா நன்றி" என்று குறிப்பிட்டு பிடன் முடித்துவிட்டார். ஒரு நாட்டின் பிரதமரை இன்னொரு நாட்டின் அதிபர் இப்படி கீழே இருக்கும் நபர் என்று குறிப்பிட்டது கடும் விமர்சனங்களை சந்தித்தது. மோரிசன் பெயரை பிடன் மறந்து போனது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் சமாளித்தார்

ஆஸ்திரேலிய பிரதமர் சமாளித்தார்

இதை பார்த்து சட்டென மோரிசன் திகைப்பில் ஆழ்ந்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் சில நொடிகள் குழம்பிப்போனார். ஆனால் அதன்பின் தொடர்ந்து அதை சமாளிக்கும் விதமாக சிரித்துக்கொண்டே நன்றி தெரிவித்தார். பிடன் தனக்கு சங்கடம் விளைவிக்கும் வகையில் பேசியதை பார்த்து மோரிசன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார். ஆனால் பல செய்தியாளர்கள் அங்கே இருந்த காரணத்தால் அவர்களுக்கு முன் முகத்தில் மாற்றத்தை காட்டாமல் தவிர்த்தார்.

கிண்டல்

கிண்டல்

பிடன் இப்படி ஆஸ்திரேலியா பிரதமரின் பெயரை மறந்ததை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். கீழே இருக்கும் நபர் என்ற அளவிற்கு மோரிசன் குறைந்து போய் விட்டாரா? என்ன நியாயம் இது. பேசுவதற்கு முன் கொஞ்சமாவது யோசித்துவிட்டு பேச மாட்டாரா என்று விமர்சனம் செய்துள்ளன. இன்னும் சில ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதை சீரியசாக எடுக்க கூடாது.. இரண்டு நாட்டிற்கு இடையில் உள்ள சகோதரத்துவத்தை இது காட்டுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

ஏற்கனவே மறந்தார்

ஏற்கனவே மறந்தார்

ஏற்கனவே அமெரிக்க அதிபர் பிடன் முன்பே பேட்டியில் இப்படி உளறியது சர்ச்சையானது. தன்னுடைய மகன் பியோ பிடன் ஜூனியர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ படையில் பணியாற்றினார் என்று குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் பியோ பிடன் ஜூனியர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றவில்லை, அவர் ஈராக்கில் பணியாற்றினார். பேட்டியில் பிடன் இப்படி உளறியது விமர்சனங்களை சந்தித்தது. பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது மகன் பியோ பிடன் ஜூனியர் ஈராக்கில் பணியாற்றினார் என்று மாற்றி கூறினார்.

விமர்சனம்

விமர்சனம்

ஏற்கனவே அமெரிக்க அதிபர் பிடனுக்கு டிமென்ஷியா என்ற மறதி குறைபாடு இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. குடியரசு கட்சி உறுப்பினர்கள், பிடனுக்கு வயதாகிவிட்டது, அவர் டிமென்ஷியாவின் தொடக்கத்தில் இருக்கிறார். இதனால் அவர் அதிபராக தொடர கூடாது என்று விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் பிடன் பொது தளத்தில் ஒரு நாட்டின் பிரதமர் பெயரை மறந்து குழம்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உண்மையில் அவருக்கு டிமென்ஷியா இருக்கிறதோ என்ற கேள்விகள் எழ தொடங்கி உள்ளது.

English summary
That Guy Below: US president Biden forgets Australian PM Morrison's name in the press meet after nuclear deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X