நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விண்கலத்தில் ஓட்டை.. ஆகாயத்தில் 6 மணி நேரம் மிதந்தபடி பஞ்சர் போடும் நாசா வீரர்கள்.. திக் நிமிடம்!

சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள் நாளை விண்வெளியில் 6 மணி நேரம் நடக்க இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள் நாளை விண்வெளியில் 6 மணி நேரம் நடக்க இருக்கிறார்கள்.

நாசாவின் சோயுஸ் விண்கலம் ஒன்று தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஆகாயத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்பட்டு இருக்கும் சிறிய துளை காரணமாக இதை கடந்த 4 மாதங்களாக பயன்படுத்தாமல் வைத்து இருக்கிறார்கள்.

சோயுஸ் எம்எஸ்-09 என்று இந்த விண்கலத்தை சரி செய்ய ரஷ்ய விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர்.

எப்படி கண்டுபிடித்தனர்

எப்படி கண்டுபிடித்தனர்

இந்த விண்கலனின் துளை இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பென்சில் அளவில் இதில் துளை உள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பட்ட அழுத்த மாறுப்பாட்டை தொடர்ந்து நடத்திய சோதனையில் இந்த துளை கண்டுபிடிக்கப்பட்டது.

அடைகிறார்கள்

அடைகிறார்கள்

இதைத்தான் தற்போது அடைக்க இருக்கிறார்கள். ஒலெஹ் கோனென்கோ மற்றும் செர்ஜி புரோகோப்யோவ் என்ற இரண்டு ரஷ்ய மற்றும் நாசா விண்வெளி வீரர்கள் இந்த வீர தீர செயலை விண்வெளியில் செய்ய இருக்கிறார்கள். நாளை இரவு 9.30 மணிக்கு அவர்கள் இந்த பணியை தொடங்குவார்கள்.

6 மணி நேரம் பயணம்

6 மணி நேரம் பயணம்

இவர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில்தான் இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியே வந்து, அதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் சோயுஸ் எம்எஸ்-09 விண்கலத்தில் உள்ள துளையை அடைப்பார்கள். இதை செய்ய மொத்தம் 6 மணி நேரம் ஆகும். அதன்படி இவர்கள் 6 மணி நேரம் புவி ஈர்ப்பு விசை இல்லாதஆகாயத்தில் மிதந்து கொண்டு வேலை செய்வார்கள்.

ஏன் இப்போது

ஏன் இப்போது

இந்த சோயுஸ் எம்எஸ்-09 தற்போது மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது. இதை சரி செய்துதான் டிசம்பர் 19ம் தேதி பூமிக்கு மீண்டும் கொண்டு வர இருக்கிறார்கள். இதில் நாசா விஞ்ஞானி புரோகோப்யோவ் வர இருக்கிறார். அதனால் இந்த வேலை தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

யார்

யார்

அதே சமயம் இந்த துளை யாரோ வேண்டும் என்றே செய்தது போல இருப்பதாக விண்வெளி வீரர்கள் கூறுகிறார்கள். இதை நாசா பூமிக்கு வந்த பின் ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. இதை யார் செய்தது, ஏன் செய்தது என்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

English summary
The 6-Hour Long spacewalk by NASA Cosmonauts to close a small deliberate hole in Soyuz MS-90 rocket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X