நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொட்டிய சாம்பல்.. அடுத்தடுத்து சிவப்பாக மாறிய நகரங்கள்.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்..என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு மாகாணங்கள், நகரங்கள் திடீரென்று சிவப்பு நிறத்தில் மாறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்களை மக்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் .

2020ம் ஆண்டு நாளுக்கு நாள் மோசம் அடைந்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸோடு தொடங்கிய இந்த வருடம் பல பிரபலங்களின் மரணங்கள், ராணுவ மோதல்கள், இயற்கை பேரிடர்கள், அரசியல் பிரச்சனைகள் என்று மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது.

உலகம் முழுக்கவே இந்த வருடம் மிக மோசமான வருடமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்று மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வாடிகனில் திரும்பும் இயல்புநிலை.. முதன்முறையாக முகக்கவசம் அணிந்து போப் ஆண்டவர் கூட்டுப் பிரார்த்தனை!வாடிகனில் திரும்பும் இயல்புநிலை.. முதன்முறையாக முகக்கவசம் அணிந்து போப் ஆண்டவர் கூட்டுப் பிரார்த்தனை!

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேற்று காலை எழுந்து வானத்தை பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹாலிவுட் படங்களில் உலகமே அழிந்த பின் வானம் எப்படி இருக்குமோ மொத்தமாக அப்படி மாறியுள்ளது. சிவப்பு நிறத்தில், கருப்பு மேகத்துடன், சூரிய ஒளி இல்லாமல் மொத்தமாக வித்தியாசமாக காட்சி அளித்துள்ளது.

சிவப்பு நிறம்

சிவப்பு நிறம்

சில இடங்களில் மேகங்களும் கூட சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது. பலருக்கு இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முழுவதுமாக சிவப்பு நிறத்தில் இருந்த காரணத்தால், சூரிய ஒளி உள்ளே வரவில்லை. இதனால் மதிய நேரத்தில் கூட சூரிய ஒளி உள்ளே வரவில்லை. நாள் முழுக்க இருளாக சிவப்பு நிறத்தில் வானம் இருந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூசி விழுந்தது

தூசி விழுந்தது

அதோடு வெப்பநிலையும் நேற்று மிக மோசமாக அதிகரித்துள்ளது. எப்போதும் இருப்பதை விட 4-5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பல இடங்களில் திடீரென அதிகரித்துள்ளது. அதேபோல் சிவப்பு நிற காற்றுடன் சேர்த்து தூசியும், சாம்பலும் வந்துள்ளது. வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மக்களின் உடை முழுக்க சாம்பல் இருந்துள்ளது.

கேள்வி கேட்டனர்

கேள்வி கேட்டனர்

இதனால் அங்கு பலர் என்ன நடக்கிறது இங்கே? ஏன் இப்படி வானம் மாறிவிட்டது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இன்னும் பலர் உலகம் அழிய போகிறதா? உலக அழிவிற்கான அறிகுறியா இது என்றும் கேட்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஏன் இயற்கை சூழ்நிலை இப்படி மாறிவிட்டது ஏதாவது பேரிடர் ஏற்பட போகிறதா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இணையத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

என்ன காரணம்

என்ன காரணம்

அமெரிக்காவின் மேற்கு பகுதி முழுக்க பல்வேறு இடங்களில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட புகை, சாம்பல், வெப்பநிலை, வானிலை மாறுபாடு ஆகியவைதான் வானம் இப்படி சிவப்பு நிறத்தில் மாற காரணம் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா முழுக்க 100க்கும் அதிகமான காட்டுத் தீ தற்போது ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கலிபோர்னியாவில் பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது .

எங்கே தீ

எங்கே தீ

இன்னொரு பக்கம் வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, டவுன்டவுன் டேலண்ட் , பீனிக்ஸ், இடாஹோ ஆகிய பகுதிகளிலும் தீ ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக அங்கு தீ வேகமாக பரவி பல லட்சம் ஏக்கர் நிலத்தை காலி செய்துள்ளது. இந்த காட்டுத் தீ தற்போது மக்கள் வாழும் இடத்திற்கு வந்துள்ளது. இதனால்தான் தற்போது வானம் திடீரென சிவப்பு நிறத்தில் மாறியதாக கூறப்படுகிறது.

கலிபோர்னியா தீ

கலிபோர்னியா தீ

கலிபோர்னியா எல்லா வருடமும் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். பொதுவாக வருட இறுதியில் அங்கு காட்டுத் தீ தொடங்கும். ஆனால் இந்த முறை செப்டம்பர் மாதமே காட்டுத் தீ தொடங்கிவிட்டது. அதனால் இந்த முறை அதிக அளவில் நிலப்பரப்பு எரிந்து நாசமாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
The sky turned red and orange in many places in California and Washinton DC in USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X