நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடைந்து கிடந்த வீட்டு ஜன்னல்.. வீட்டுக்குள் வந்த ஓனர் அம்மா.. பாத்டப்பில் கண்ட காட்சி.. கொடுமையே

இதேபோல மற்றொரு கார் திருட்டு சம்பவமும் இப்பகுதியில் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வீட்டில் திருட வந்த திருடன் ஹாயாக குளியல் டப்பில் குளித்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளரான பெண்மணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் திருட வந்த 27 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் சியாட்டில் நேற்றிரவு சுமார் 7.15 மணியளவில் உள்ளூர் காவல்துறையினருக்கு ஒரு போன் கால் வந்தது. எதிர் முனையில் பேசிய பெண்மணி தன் வீட்டில் திருடன் பதுங்கி இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "நேற்றிரவு பெண்மணி ஒருவர் எங்களுக்கு போன் செய்து பதற்றமாக பேசினார்.

வீட்டில் யாரோ பதுங்கியுள்ளார் என்பதை தவிர அப்பெண் கூறியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. உடனடியாக நாங்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அப்பெண்ணிடம் விசாரித்ததில் விஷயம் புரிய வந்தது. அதாவது இப்பெண்மணி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் வீட்டினுள் யாரோ இருப்பது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து எங்களுக்கு அழைத்திருக்கிறார். நாங்கள் வீட்டின் வெளியே சோதனையிட்டபோது ஜன்னல் ஒன்று உடைக்கப்பட்டிருக்கிறது.

கைது

கைது

எனவே உள்ளே இருக்கும் நபரை வெளியில் வரவைப்பதற்காக மைக் மூலம் அழைத்து பார்த்தோம். ஆனால் அந்த நபர் வெளியே வரவில்லை. இது வேலைக்கு ஆகாது என்று நாங்கள் அதிரடியாக வீட்டினுள் புகுந்து சோதனையை நடத்தினோம். சோதனையில் வீட்டின் பாத்ரூமில் உள்ள குளியல் டப்பில் இளைஞர் ஒருவர் ஆடைகளை அணிந்தவாறே படுத்திருந்தார். அவரிடம் பாத்ரூமிலிருந்து வெளியே வருமாறு உத்தரவிட்டோம். ஆனால் நாங்கள் சொல்வதை அவர் கேட்கவேயில்லை. எனவே அவரை கைது செய்துள்ளோம். விசாரணையில் அவர் ஏன் இப்படி செய்தார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. தற்போது அந்த 27 வயது இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளனர்.

முதல் முறையல்ல

முதல் முறையல்ல

இந்த நபர் யார் என்பது குறித்த அடையாளத்தையும் வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற விநோதமாக சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில் கார் ஒன்று திருடுபோயுள்ளது. ஆனால் இந்த திருட்டு சம்பவம் மக்களிடையே பேசுபொருளானது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "கடந்த வாரம் எனக்கு தெரிந்த நண்பரின் சொந்தகாரர் ஒருவர் திடீரென உயிரிழந்துவிட்டார். இந்த மறைவு செய்தியை அறிந்து நானும் அவரது இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்தேன்.

கார்

கார்

உயிரிழந்த நபர் வயதானவர் எப்படி இருந்தாலும் அவருக்கு 70 வயதுக்கு அதிகமாக இருக்கும். வீட்டிலிருந்து அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல ஒரு வாகனம் தேவைப்பட்டது. எனவே பிணம் கொண்டு செல்லும் காரை நண்பர்கள் நாங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தோம். உடல் வாகனத்தில் மயானம் வரை கொண்டு செல்லப்பட்டது. உடன் நாங்கள் மற்றொரு காரில் சென்றோம். கார் மயனத்தை அடைந்தது. ஆனால் அதன் இன்ஜின் ஆஃப் செய்யப்படவில்லை. நாங்கள் மயான குழியை பார்க்க புறப்பட்டு சென்றோம். காரின் ஓட்டுநர் எங்களுடன்தான் இருந்தார்.

திருட்டு

திருட்டு

ஆனால் நாங்கள் மயானத்தை பார்த்துவிட்டு திரும்பியபோது கார் அதிவேகமாக மயானத்தை விட்டு பறந்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு ஒருகனம் என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே நாங்கள் அனைவரும் காரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் இருந்த காரின் ஓட்டுநர் கார் திருடப்பட்டிருப்பதை கூறினார். இதனையடுத்து நாங்கள் காரை துரத்த முயன்றோம். ஆனால் கார் அதற்குள் வேறு எங்கேயோ சென்று மறைந்துவிட்டது. காரிலிருந்து உடல் நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்டிருந்தது. இந்த சம்பவம் எங்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது" என்று கூறினார்.

English summary
The woman, the owner of the house, who was shocked to find the thief who had come to steal the house in America, was taking a bath in the bathtub, has filed a complaint with the police. A 27-year-old man who came to steal in this incident has been arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X