நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்!

அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தற்போது புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தற்போது புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தற்போது உச்சம் பெற தொடங்கி உள்ளது. இது உலகம் முழுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை பாதித்து வருகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் அதிகம் குற்றச்சாட்டு வைக்கும் இரண்டு நாடுகள் சீனாவும், இந்தியாவும்தான்.

இரண்டு நாடுகள்

இரண்டு நாடுகள்

இந்தியா மீதும் சீனா மீதும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அமெரிக்கா பிற நாடுகளின் பொருட்களுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வரி விதிக்கப்படுகிறது.

சீனா எப்படி

சீனா எப்படி

அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் 25% வரி விதிக்கப்படுகிறது. இதை டிரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டி வந்தார். இதற்கு எதிராக அவர் தொடர்ச்சியாக நிறைய நடவடிக்கைகளை எடுத்தார்.

அதிகம்

அதிகம்

அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதம் முன் சீனாவின் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அதிக அளவில் அமெரிக்காவில் வரி விதிக்கப்பட்டது. அதேபோல் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி டிரம்ப் மூலம் இந்த கூடுதல் வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

மோசம்

மோசம்

இதன் மதிப்பு 300 பில்லியன் டாலர் ஆகும். தற்போது இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்றுதான் சீனா வெளியிட்டது. இதன் மதிப்பு 80 பில்லியன் டாலர் ஆகும்.

என்ன சண்டை

என்ன சண்டை

இதனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு உலகிலேயே சீனாவில்தான் இனி மிக அதிக அளவில் வரி விதிக்கப்படும். அதேபோல் டிசம்பர் மாதம் இன்னும் 5% கூடுதலாக வரி விதிக்கவும் சீனா முடிவெடுத்துள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் இந்த வர்த்தகப் போர் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
The trade war between China and USA escalates furthermore as the Asians increase the tax more.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X