நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மாடி.. உலக வரலாற்றில் இல்லாத குளிர்.. அண்டார்டிகாவாக மாறிய அமெரிக்கா.. மொத்தமாக முடங்கியது!

அமெரிக்காவில் நிலவி வரும் மிக மோசமான குளிரான வானிலை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் வரலாறு காணாத பனி- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் நிலவி வரும் மிக மோசமான குளிரான வானிலை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அண்டார்டிகாவை விட மிக மோசமான குளிரான வானிலை நிலவி வருகிறது.

    உலகம் முழுக்க பல நாடுகளில் தற்போது பனிப்பொழிவு அதிகம் ஆகியுள்ளது. இந்தியாவிலும் இந்த வருடம் குளிர் மிக அதிகமாக இருந்தது. காஷ்மீரில் இன்னும் மோசமாக பனிபொழிந்து வருகிறது.

    தற்போது அமெரிக்காவில் பல இடங்கள் பனிபொழிவால் பாதிக்கப்பட்டு வருகிறது. உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு அங்கு பனிபொழிந்து வருகிறது.

    என்ன வெப்பநிலை

    என்ன வெப்பநிலை

    தற்போதும் அமெரிக்காவின் மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில்தான் மிக குளிரான வெப்பநிலை நிலவுகிறது. சில இடங்களில் மைனஸ் 23-28 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மேலும் சில இடங்களில் மைனஸ் 35-40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மினசோட்டா போன்ற சில இடங்களில் மிக மிக குறைவாக மைனஸ் 53-56 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

    மொத்தமாக உறைந்தது

    மொத்தமாக உறைந்தது

    இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கி உள்ளது. எல்லா இடங்களிலும் பனி மொத்தமாக நிரம்பி இருக்கிறது. சாலைகளை பனி மொத்தமாக மூடி உள்ளது. ரயில்வே தண்டவாளங்களை பனி மறைத்து இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    Polar Vortex என்று அழைக்கப்படும் துருவ சுழல்தான் இதற்கு காரணம் ஆகும். துருவ சுழல் என்பது வானிலை மாற்றம் காரணமாக ஏற்படும் குளிர் காற்று ஆகும். இந்த குளிர் காற்றுதான் அமெரிக்காவில் தற்போது வீசி வருகிறது. இதனால் அங்கு அண்டார்டிகாவை விட மிக மோசமான குளிரான வானிலை நிலவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த டிசம்பரில் குளிர் காற்று வீசியது.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    அமெரிக்காவில் சிகாகோ இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் மினசோட்டா பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மிச்சிகன், இல்லினாய்ஸ், கிரேட் லேக்ஸ், விஸ்கான்சின், மிசிசிப்பி, அலபாமா நியூ இங்கிலாந்து ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா முழுக்கவே மிக மோசமான வானிலை நிலவுகிறது.

    எல்லாமும் முடக்கம்

    எல்லாமும் முடக்கம்

    இதனால் அமெரிக்காவில் பல மாகாணங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை பார்க்கக் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடைகள், உணவகங்கள் மொத்தமாக மூடப்பட்டு இருக்கிறது. மக்கள் வெளியே வர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    நன்றி: சுகன்யா

    English summary
    Deep freeze in USA: The States gets its record-breaking cold weather after polar vortex grips.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X