நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிநவீன லேசர் ஆயுதம்.. நடுக்கடலில் நடந்த சீக்ரெட் சோதனை வெற்றி.. ஆட்டத்திற்கு தயாராகும் அமெரிக்கா!

அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது. அதிகரித்து வரும் போர் அச்சத்துக்கு இடையே இந்த சோதனையை அமெரிக்கா செய்துள்ளது.

Recommended Video

    New High Energy Laser Weapon System : சீக்ரெட் சோதனை வெற்றி

    அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக டிரேட் வார் நடத்திக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனாவின் தோற்றம் குறித்தும் அமெரிக்கா, சீனா மோதி வருகிறது.

    அதேபோல் தென் சீன கடல் எல்லையில் இரண்டு நாடுகளும் மிக மோசமாக சண்டை போட தயார் ஆகி வருகிறது. இதனால் இது எப்போது வேண்டுமானாலும் முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார்கள்.

    அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்துஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

    அமெரிக்கா சோதனை

    அமெரிக்கா சோதனை

    இந்த நிலையில்தான் அமெரிக்கா அணு ஆயுத சோதனை செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. இது தொடர்பான ஆலோசனைகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது என்கிறார்கள். அதிகரித்து வரும் போர் அச்சத்துக்கு இடையே இந்த சோதனையை அமெரிக்கா செய்துள்ளது.

    லேசர் ஆயுதம்

    லேசர் ஆயுதம்

    அதன்படி பசிபிக் கடலில் அமெரிக்கா கடற்படை மூலம் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலே ரோந்து பணிகளை மேற்கொள்ளும் பிற நாட்டு டிரோன் விமானங்கள், தாழ்வாக பறக்கும் விமானங்களை தாக்கி அழிக்கும் ஆயுதம் ஆகும். லேசர் கதிர்களை விமானம் மீது செலுத்தி அதை நொடியில் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டதாகும். அமெரிக்காவிடம் ஏற்கனவே லேசர் ஆயுதங்கள் இது போல உள்ளது. இது அதன் அதி நவீன வகை என்று கூறுகிறார்கள்.

    சீக்ரெட் சோதனை

    சீக்ரெட் சோதனை

    இந்த சோதனையை மிகவும் ரகசியமாக நடத்தி இருக்கிறார்கள். பசிபிக் கடலில் குறிப்பாக எங்கு சோதனை நடந்தது என்று கூறப்படவில்லை. கடந்த மே 16ம் தேதியே இந்த சோதனையை நடத்திவிட்டனர். ஆனால் அப்போது இதை பற்றி தகவல் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து இன்றுதான் இதை பற்றி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அமெரிக்க கடல் எல்லையில் பிற உளவு விமானங்கள் வருவதை தடுக்க இதை களமிறக்கி உள்ளனர்.

    ரோபோட் எப்படி

    ரோபோட் எப்படி

    இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் செயல்பட கூடிய தன்னிச்சையாக இயங்கும் லேசர் ஆயுதம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்தது. வானில் பறக்கும் விஷயங்களை குறி வைத்து, அதி வேகமாக செயல்பட்டு அதை கண்ணிமைக்கும் நேரத்தில் இது தாக்கி அழிக்கும் என்று கூறுகிறார்கள். இது திட நிலையில் இருக்கும் லேசர் ஆகும். Solid State Laser Weapons System Demonstrator என்று இதை அழைக்கிறார்கள்.

    பெரும் அச்சம்

    பெரும் அச்சம்

    இதன் மூலம் அமெரிக்க கடற்படை புதிய பலம் பெற்றுள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு முன் இருந்த லேசர் ஆயுதங்களை விட இது மிக அதிக வலிமை வாய்ந்தது. சீனாவிற்கு எதிரான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகள் அந்த நாடு போருக்கு தயாராகி வருவதை காட்டுவதாக கூறுகிறார்கள்.

    English summary
    The US navy tests high power new laser weapon amid its clash with China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X