நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வேக்சின்.. 33 கோடி குடிமகன்களுக்காக.. 80 கோடி டோஸ்களை ஆர்டர் செய்த அமெரிக்கா.. திட்டம் என்ன?

Google Oneindia Tamil News

நியூயார்க்: தங்கள் நாட்டில் இருக்கும் 33 கோடி மக்களுக்காக 80 கோடி கொரோனா வேக்சின் டோஸ்களை அமெரிக்கா இதுவரை ஆர்டர் செய்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதிலும் ரஷ்யா மற்ற நாடுகளுக்கு முன் முதல் ஆளாக தனது மருந்தை பதிவு செய்துள்ளது. ஸ்புட்னிக் வீ என்ற மருந்தை ரஷ்யா பதிவு செய்துள்ளது.

இன்னொரு பக்கம் அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை துரிதப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் "Operation Warp Speed'' என்ற திட்டம் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வாட்டிய தனிமை.. அதிகரித்த மன அழுத்தம்.. 21 வயசுதான்.. 3வது மாடியிலிருந்து குதித்து.. கொடுமை!வாட்டிய தனிமை.. அதிகரித்த மன அழுத்தம்.. 21 வயசுதான்.. 3வது மாடியிலிருந்து குதித்து.. கொடுமை!

என்ன திட்டம்

என்ன திட்டம்

இந்த "Operation Warp Speed'' திட்டத்தின் கீழ் நிறைய தடுப்பு மருந்துகளை உருவாக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதற்காக நீதியை தற்போது அமெரிக்க அரசு வாரி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது தங்கள் நாட்டில் இருக்கும் 33 கோடி மக்களுக்காக 80 கொரோனா வேக்சின் டோஸ்களை அமெரிக்கா இதுவரை ஆர்டர் செய்துள்ளது.

ஆக்ஸ்போர்ட்

ஆக்ஸ்போர்ட்

அதன்படி ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இந்த ஆஸ்டெராசெனெகா நிறுவனத்திடம் 30 கோடி டோஸ்களை அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இதற்காக 1.2 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவு செய்துள்ளது.

நோவாவாக்ஸ் நிறுவனம்

நோவாவாக்ஸ் நிறுவனம்

அதேபோல் நோவாவாக்ஸ் நிறுவனத்திடம் 100 பில்லியன் கொரோனா வேக்சின் டோஸ்களை அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. 1.6 பில்லியன் டாலரை இதற்காக அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. அதேபோல் அமெரிக்கா சார்பாக சனோபி மற்றும் கிளாக்ஸோஸ்மித்கிளீன் (Sanofi மற்றும் GlaxoSmithKlin) நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ்களை அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. 2.1 பில்லியன் டாலருக்கு அமேரிக்கா இதை ஆர்டர் செய்துள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய டீல்

அமெரிக்காவின் மிகப்பெரிய டீல்

அமெரிக்கா செய்த மிகப்பெரிய டீல் சனோபி மற்றும் கிளாக்ஸோஸ்மித்கிளீன் உடன்தான். இதேபோல் ஜான்சான் அண்ட் ஜான்சனா நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ்களை ஆர்தர் செய்துள்ளது . மேலும் பிபிசார் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்திடம் 100 மில்லியன் டோஸ்களை அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இதற்காக 1.95 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா செலவு செய்துள்ளது.

மாடர்னா நிறுவனம்

மாடர்னா நிறுவனம்

முக்கியமாக மாடர்னா நிறுவனத்திடம் 1.52 பில்லியன் டாலருக்கு மேலும் 100 மில்லியன் மருந்துகளை அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மருந்து ஆராய்ச்சிக்காக மேலும் 2.5 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்ய உள்ளது. இதில் மூன்றாம் கட்ட மனித சோதனைக்கு 30000 பேரை மாடர்னா நிறுவனம் உட்படுத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 45 பேரிடம் இந்த சோதனை செய்யப்பட்டது. இதில் எல்லோருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    புதிய மைல்கல்லை எட்டிய கோவாக்சின்.. சோதனையில் பங்கேற்ற 50ல் 32 பேருக்கு நல்ல ரிசல்ட்
    எம்ஆர்என்ஏ மருந்து

    எம்ஆர்என்ஏ மருந்து

    இந்த மாடர்னா மருந்து எம்ஆர்என்ஏ முறைப்படி செயல்படும் மருந்து ஆகும். உடலில் எம்ஆர்என்ஏ மூலம் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை செலுத்த உள்ளனர். தற்போது உருவாக்கப்பட்டு வரும் வேக்சின்களில் மனித சோதனைக்கு சென்று இருக்கும் ஒரே எம்ஆர்என்ஏ மருந்து இதுதான். இதன் மூலம் தங்கள் நாட்டில் இருக்கும் 33 கோடி மக்களுக்காக 80 கொரோனா வேக்சின் டோஸ்களை அமெரிக்கா இதுவரை ஆர்டர் செய்துள்ளது.

    English summary
    The US ordered 80 crore vaccine doses for its 33 crore people by Operation Warp Speed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X