நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

63 கனடா.. 11 உக்ரைன்.. 3 ஜெர்மனி.. நேட்டோ மக்களை காவு வாங்கிய ஈரான்.. கடும் கோபத்தில் டிரம்ப்!

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானத்தில் நேட்டோ படை நாடுகளை சேர்ந்த மக்கள் பலர் பயணம் செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உக்ரைன் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்... ஈரான் ஒப்புதல் | Ukranian plane incident

    நியூயார்க்: ஈரானின் ஏவுகணை தாக்குதலில் நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானத்தில் நேட்டோ படை நாடுகளை சேர்ந்த மக்கள் பலர் பயணம் செய்துள்ளனர். இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது.

    உக்ரைன் விமானம் விபத்து உலகம் மொத்தத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனென்றால் இது விமான விபத்து கிடையாது, ஏவுகணை தாக்குதல். ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும். விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள்.

    டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. இன்று காலைதான் ஈரான் இந்த தாக்குதலை ஒப்புக்கொண்டது.

    மனித தவறு.. 176 பேர் பலி.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு லட்டு போல கிடைத்த காரணம்.. என்ன ஆகுமோ!?மனித தவறு.. 176 பேர் பலி.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு லட்டு போல கிடைத்த காரணம்.. என்ன ஆகுமோ!?

    என்ன ஒப்புதல்

    என்ன ஒப்புதல்

    இந்த விமான விபத்தில் 63 கனடா மக்கள் பலியானார்கள். 11 உக்ரைன் மக்கள் பலியானார்கள். அதேபோல் 10 சுவீடன் மக்கள் பலியானார்கள். 3 ஜெர்மனி, 3 பிரிட்டன் நாட்டு மக்கள் பலியானார்கள்.4 ஆப்கானிஸ்தான் மக்கள் பலியானார்கள். இதில் ஈரான் தங்கள் சொந்த நாட்டு மக்களையும் கொன்று குவித்துள்ளது. இதில் 87 ஈரான் மக்கள் பலியானார்கள்.

    நேட்டோ

    நேட்டோ

    இதில் கனடா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவின் நேட்டோ படையை சேர்ந்த நாடுகள். சுவீடன், உக்ரைன் ஆகிய நாடுகள் நேட்டோவின் கூட்டணி நாடுகள் ஆகும். இதில் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஆகும்.

    போர் வந்தால்

    போர் வந்தால்

    ஒருவேளை ஈரான் உடன் போர் வந்திருந்தால், இந்த நாடுகள் எல்லாம் அமெரிக்கா உடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக போர் செய்திருக்கும் . தற்போது இதே நேட்டோ படை மக்கள்தான் ஈரானின் தாக்குதலில் காவு வாங்கப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் ஈரானுக்கு சிக்கலாகி உள்ளது. இந்த பிரச்னையை ஐநா வரை கொண்டு செல்ல உக்ரைன் திட்டமிட்டு வருகிறது.

    கனடா முடிவு

    கனடா முடிவு

    இன்னொரு பக்கம் இதை தீவிரமாக விசாரிக்க கனடா முடிவு செய்துள்ளது. இதற்காக உக்ரைன் வழியாக வல்லுநர்கள் குழு ஒன்றை ஈரானுக்கு அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது. ஆகவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதை ஒரு கை பார்க்காமல் விட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏன் நேட்டோ

    ஏன் நேட்டோ

    இப்படி நேட்டோ படையை சேர்ந்த நாட்டு மக்கள் மீது ஈரான் கை வைத்திருப்பது அமெரிக்காவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அமெரிக்கா எதை வேண்டுமானாலும் தாங்கி கொள்ளும். ஆனால் நேட்டோவை தாக்குவதை தாங்கவே தாங்காது.

    அஸ்திவாரம் முக்கியம்

    அஸ்திவாரம் முக்கியம்

    அமெரிக்காவின் அஸ்திவாரமே நேட்டோவில்தான் கட்டப்பட்டு இருக்கிறது. அதனால் இதை கடுமையாக எதிர்க்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கு எதிராக அரசியல் ரீதியாகவும், தாக்குதல் ரீதியாகவும் டிரம்ப் விரைவில் பதிலடி கொடுப்பார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    The USA gets angry with Iran for shooting down the Ukranian plane which kills NATO people a lot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X