நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனித தவறு.. 176 பேர் பலி.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவிற்கு லட்டு போல கிடைத்த காரணம்.. என்ன ஆகுமோ!?

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது, அமெரிக்காவிற்கு ஒரு வகையில் சந்தோசத்தை கொடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உக்ரைன் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்... ஈரான் ஒப்புதல் | Ukranian plane incident

    நியூயார்க்: உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது, அமெரிக்காவிற்கு ஒரு வகையில் சந்தோசத்தை கொடுத்துள்ளது. ஆம் ஈரானின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்கா கண்டிப்பாக தனக்கு சாதகமாக பயன்படுத்தும்.

    ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. இதன் மூலம் ஈரானில் விழுந்து விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம் உண்மையில் விபத்தில் சிக்கவில்லை, அது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதியானது.

    ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும். விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள்.
    டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது.

    ஒப்புதல்

    ஒப்புதல்

    இந்த நிலையில் ஈரானின் இந்த ஒப்புதல் காரணமாக அமெரிக்காவிற்கு லட்டு போல ஈரானை எதிர்க்க ஒரு காரணம் கிடைத்துள்ளது. ஈரானின் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா டிரோன் மூலம் கொலை செய்த பின் ஈரான் மீது பலருக்கும் அனுதாபம் ஏற்பட்டது. அதிலும் சுலைமானி இறுதி ஊர்வலம் ஈரான் மீது பலருக்கும் கரிசனத்தை ஏற்படுத்தியது .

     ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் தற்போது ஈரான்தான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் தேவையில்லாமல் அப்பாவி பொதுமக்கள் 176 பேர் பலியாகிவிட்டார்கள். இரண்டு நாட்டு ஈகோ பிரச்சனையில் நடந்த சண்டை தொடங்கும் முன்பே 176 பேரை பலிவாங்கி இருக்கிறது. இதுதான் ஈரானை தற்போது சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது. ஈரான் மீது மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் மீண்டும் மறைந்துள்ளது .

    நேற்று என்ன

    நேற்று என்ன

    நேற்றே அமெரிக்கா அதிபர் டிரம்பும் இதை பற்றி தனது சந்தேகத்தை வெளியிட்டார். இந்த நிலையில்தான் நேற்று இந்த விமான விபத்து தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி அதை உறுதிப்படுத்தியது. தற்போது ஈரானும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. இதை தற்போது அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பயன்படுத்த உள்ளது. பொதுமக்கள் பலியானதை வைத்து ஈரானை கட்டுப்படுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

    தடை

    தடை

    இந்த விமான விபத்து காரணமாக, அமெரிக்காவின் கை மீண்டும் ஈரான் உடனான சண்டையில் ஓங்கியுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உலக நாடுகளை ஒன்று திரட்ட உள்ளது. இதனால் ஈரான் பெரிய சிக்கலுக்கு உள்ளாகும், ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை சந்தித்து வரும் ஈரான், இந்த விஷயம் உண்மையாகி இருப்பதால் இன்னும் பல தடைகளை சந்திக்க நேரிடும்.

    ஐநா எப்படி

    ஐநா எப்படி

    இன்னொரு பக்கம் ஐநாவில் உக்ரைன் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐநாவில் புகார் அளிக்க உள்ளார். விமான விபத்து தொடர்பாக பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க உள்ளார். இதனால் ஈரான் உலக அளவில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க போகிறது.

    English summary
    The USA gets new opportunity against Iran after its acceptance of shooting down the Ukranian plane mistakenly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X