நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராட்சச நதி.. செவ்வாய்க்கு வெற்றிகரமாக நாசா அனுப்பிய ரோபோட், ஹெலிகாப்டர்.. அசர வைக்கும் மார்ஸ் மிஷன்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தை நோக்கி அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக தனது பெர்சவரன்ஸ் (perseverance) ரோவரை இன்று அனுப்பி உள்ளது. அட்லாஸ் 5 ராக்கெட் மூலம் நாசா வெற்றிகரமாக இந்த ரோவரை அனுப்பி உள்ளது.

செவ்வாய் கிரகத்தை தற்போது சிறிய நாடுகள் தொடங்கி பெரிய நாடுகள் வரை எல்லாம் தீவிரமாக கவனிக்க தொடங்கிவிட்டது. இந்தியாவின் மங்கள்யான் 1 போலவே கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு தனது ஆர்பிட்டரை அனுப்பியது, ஹோப் எனப்படும் ஆர்பிட்டரை அமீரகம் அனுப்பியது .

அதை தொடர்ந்து சீனாவின் தியான்வென் 1 திட்டம் விண்ணில் கடந்த வாரம் செலுத்தப்பட்டது. அடுத்து வருடம் தொடக்கத்தில் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வரும் என்பதால் இந்த காலகட்டத்தில் விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அயோத்தியில் பூமி பூஜை...நியூயார்க் டைம் ஸ்கொயரில் ராமர் புகைப்படம்...வீடியோ...சிறப்பு ஏற்பாடு!! அயோத்தியில் பூமி பூஜை...நியூயார்க் டைம் ஸ்கொயரில் ராமர் புகைப்படம்...வீடியோ...சிறப்பு ஏற்பாடு!!

அமெரிக்கா வெற்றி

அமெரிக்கா வெற்றி

சீனா, அமீரகம் இரண்டின் திட்டமும் வெற்றிபெற்றது.இந்த நிலையில் அமெரிக்காவும் தற்போது வெற்றிகரமாக செவ்வாயை நோக்கி விண்கலத்தை அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தை நோக்கி அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக தனது பெர்சவரன்ஸ் (perseverance) ரோவரை இன்று அனுப்பி உள்ளது. அட்லாஸ் 5 ராக்கெட் மூலம் நாசா வெற்றிகரமாக இந்த ரோவரை அனுப்பி உள்ளது.

எங்கிருந்து

எங்கிருந்து

அமெரிக்காவின் புளோரிடாவில் இருக்கும் கேப் கனவரேல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலத்தை நாசா ஏவி உள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கு 2.4 பில்லியன் டாலர் செலவு ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த பெர்சவரன்ஸ் (perseverance) வரும் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்று அடையும். இந்த ரோவர் பெரிய கார் அளவில் இருக்கும் ரோவர் ஆகும்.

ஆராய்ச்சி செய்யும்

ஆராய்ச்சி செய்யும்

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பெரிய நதி இருந்ததாக கருதப்படும் ஜெசோரோ என்ற பகுதியில் இந்த பெர்சவரன்ஸ் (perseverance) இறங்க உள்ளது. அங்கு ஒரு காலத்தில் மிகப்பெரிய நதி இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு உயிர்கள் இருந்ததா, நிலப்பகுதி எப்படி இருந்தது என்பதை ஆராய்ச்சி செய்ய இந்த ரோவர் பயன்படுத்தப்படும். முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் தன்னிச்சையாக செயல்படும் இந்த ரோவர் அங்கு நீர் மற்றும் செல்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை செய்யும்.

ஹெலிகாப்டர் செல்லும்

ஹெலிகாப்டர் செல்லும்

அதேபோல் செவ்வாய் கிரகத்தில் இந்த ரோவரில் இருந்து வெளியே வரும் ஹெலிகாப்டர் ஒன்றும் ஆராய்ச்சி செய்ய இருக்கிறது. 1.8 கிலோ எடை கொண்ட சிறிய ஹெலிகாப்டர் ஆகவும் இது. இதன் பெயர் இன்ஜெனியூட்டி (Ingenuity) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. செவ்வாயில் நீர் இருந்த பகுதிகளை இது ஆராய்ச்சி செய்யும். அதேபோல் செவ்வாயில் இருந்து வெளியாகும் சத்தத்தை இது ஆராய்ச்சி செய்ய உள்ளது.

செம சாதனை

செம சாதனை

ஒன்பதாவது முறையாக செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்கா இப்படி மிஷன் ஒன்றை அனுப்புகிறது. செவ்வாயில் இதன் மூலம் மறைந்து இருக்கும் மர்மங்கள் வெளியே வரும் என்று கூறுகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் 2030ம் ஆண்டு குடியேற அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அது தொடர்பான ஆராய்ச்சியில் இந்த மிஷன் முக்கிய பங்கு வகிக்கும் என்கிறார்கள்.

English summary
The USA successfully sent the rocket carries Perseverance rover to Mars today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X