நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரானின் புனித தலங்களை தாக்க மாட்டோம்.. டிரம்பையே எதிர்க்கும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம்.. பிளவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்

    நியூயார்க்: ஈரானில் இருக்கும் புனித தலங்களை தாக்குவதற்கு தயாராக இல்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது . இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பென்டகன் இடையே சண்டை வந்துள்ளது..

    ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவை திருப்பி தாக்க ஈரான் திட்டமிட்டு வருகிறது. ஈரானின் இந்த திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அதில், ஈரானில் இருக்கும் புனித தலங்களை தாக்குவதற்கு கூட அமெரிக்கா தயாராக இருக்கிறது, இதற்காக 52 இடங்களை குறி வைத்துள்ளோம். நாங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கிறோம், என்றார்.

     உலகிலேயே முதல்முறை.. அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்.. பெரும் பரபரப்பு! உலகிலேயே முதல்முறை.. அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்.. பெரும் பரபரப்பு!

    வேறு என்ன

    வேறு என்ன

    மேலும், சிலர் இப்படி புனித தலங்களை தாக்க கூடாது. அது போர் குற்றம் என்று கூறுவார்கள். அது எனக்கு கவலை இல்லை. ஈரான் எங்கள் நாட்டின் மீது குண்டு வீசியுள்ளது. எங்கள் மக்களை கொன்றுள்ளது. எங்கள் மக்களை கொடுமை படுத்தி இருக்கிறது. அதற்கு பதிலடி கொடுப்போம் என்று குறிப்பிட்டார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இதை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனே எதிர்த்து உள்ளது. ஈரானில் கலாச்சார இடங்கள், புனித தலங்கள் எதையும் நாங்கள் தாக்க போவது இல்லை. அப்படி எந்த ஒரு திட்டமும் அமெரிக்க ராணுவத்திற்கு கிடையாது என்று பென்டகன் அறிவித்துள்ளது.

    முதல்முறை இப்படி

    முதல்முறை இப்படி

    அப்படி செய்வது போர் குற்றம் என்று பென்டகன் கூறியுள்ளது. அதோடு பொதுவாக அமெரிக்க அதிபர்கள் சொல்வதை அப்படியே பென்டகன் வழிமொழியும். ஆனால் இந்த முறை பென்டகன் டிரம்பிற்கு எதிராக பேச தொடங்கி உள்ளது. இதனால் பென்டகன் - டிரம்ப் இடையே சண்டை உருவாகி உள்ளது. அமெரிக்க அரசியலில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை.

    வேறு என்ன

    வேறு என்ன

    இன்னொரு பக்கம் டிரம்பின் பலத்தை குறைக்க அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையிலான சண்டை உலக நாடுகள் இடையில் பிளவை கொண்டு வருகிறதோ இல்லையோ , அமெரிக்காவிற்குள் பெரிய பிளவை கொண்டு வந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

    English summary
    The USA vs Iran: We won't attack cultural sites says Pentagon contradicts President Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X