நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1.20 லட்சம் ராணுவத்தினரை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக பயங்கர திட்டம்!

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக 1,20,000 போர் படைகளை அமெரிக்க அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப முடிவெடுத்து உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    USA Vs Iran: 1 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ படைகளை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்- வீடியோ

    நியூயார்க்: ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக 1,20,000 போர் படைகளை அமெரிக்க அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப முடிவெடுத்து உள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் இந்த போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    The USA will deploy 120,000 troops in the Middle East against Iran

    • ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் நிகழும் பிரச்சனையை பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிடலாம்.
    • 2015ல் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது.
    • அதன்பின் சென்ற வருடம் ஈரான் மீது அமெரிக்கா 2 பொருளாதார தடைகளை விதித்தது.
    • கடந்த வாரம் ஈரான் மீது அமெரிக்கா 3 வது பொருளாதார தடையை விதித்தது.
    • ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவ அமெரிக்கா தடை செய்தது.
    • கோபப்பட்ட ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக அறிவித்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியேதான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்கிறது.
    • நேற்று சவுதி, அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளது.
    • இதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    இதையடுத்து அமெரிக்கா ஈரானை தாக்கும் பொருட்டு ஏற்கனவே இரண்டு படைகளை அனுப்பி உள்ளது. இன்னும் 1,20,000 படைகளை அமெரிக்கா வரும் நாட்களில் அனுப்ப உள்ளது. 6 மாதத்திற்குள் அனைத்து படைகளும் ஈரானுக்கு அனுப்பப்படும்.

    அதன்பின் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இன்னும் மற்ற நாடுகளின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. விமானங்கள், போர் கப்பல்களையும் அமெரிக்க ஈரானை நோக்கி அனுப்பி உள்ளது.

    அடுத்த அமெரிக்கா அதிபர் தேர்தலுக்குள் இந்த போர் வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஈரானுக்கு எதிராக மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அணி சேர்ந்து இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    The USA will deploy 120,000 troops in the Middle East against Iran says White House report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X