நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தமாக உறைந்த நயாகரா அருவி.. கண்கொள்ளா காட்சி.. எப்படி இருக்கு பாருங்க!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் மிக மோசமான குளிரான வானிலை காரணமாக நயாகரா அருவி மொத்தமாக உறைந்துள்ளது.

வட அமெரிக்காவின் எல்லையில் கனடாவை ஒட்டி அமைந்திருக்கிறது நயாகரா அருவி. உலகின் பல கோடி மக்கள் வருடம் முழுக்க இந்த அருவியை வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

உலகில் உள்ள மிக அழகான அருவிகளில் இதுதான் எப்போதும் டாப். இந்த நிலையில் நயாகரா அருவி தற்போது மொத்தமாக உறைந்து போய் உள்ளது.

குளிரான வானிலை

அமெரிக்காவில் வீசி வரும் பனிக்காற்று காரணமாக அங்கு வெப்பநிலை மிகவும் மோசமாக குறைந்து இருக்கிறது. கடந்த ஒரு வாரமாகவே அங்கு வெப்பநிலை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. முக்கியமாக வட அமெரிக்காவில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்ஸியஸை தாண்டி சென்று கொண்டு உள்ளது.

நயாகராவில் மோசம்

இந்த குளிர் நயாகராவையும் விட்டுவைக்கவில்லை. தற்போது நயாகராவில் மைனஸ் 17 டிகிரி செல்ஸியஸ் முதல் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் வரை மிக மோசமான குளிர் நிலை நிலவுகிறது. இதனால்தான் அங்கு அருவி தற்போது உறைந்து போய் இருக்கிறது.

வெறும் 15 நிமிடம்

கடந்த ஒரு வாரமாக அங்கு சூரியனே பெரிய அளவில் எட்டிப்பார்க்கவில்லை. வெறும் 15 நிமிடம்தான் நேற்று சூரிய ஒளி பட்டு இருக்கிறது. அப்போது அருவியில் கொஞ்சம் தண்ணீர் உருகி சென்று உள்ளது. பின் மீண்டும் சிறிது நேரத்தில் அருவி மொத்தமும் உறைந்துள்ளது.

மக்கள் கொண்டாட்டம்

இதை காண தற்போது மக்கள் அங்கு குவிந்து வருகிறார்கள். அருவிக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகிறார்கள் . இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து திடீர் என்று அதிகம் ஆகியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பெரிய வைரலாகி உள்ளது.

English summary
Chill out!: The whole Niagara falls get frozen - Stunning Photos
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X