நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவமானம்.. அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை செய்த பெண்.. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை காட்டிய பெண் ஒருவர், டிரம்ப்பின் கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை காட்டிய பெண் ஒருவர், டிரம்ப்பின் கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

2017ல்தான் அந்த சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜூலி பிரிஸ்க்மேன். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கான்வாயை பார்த்து தவறான சைகை செய்தார்.

இவர் சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அவரை கடந்து டிரம்ப் வாகனம் சென்றது. இதை பார்த்ததும் கோபம் அடைந்த ஜூலி பிரிஸ்க்மேன், தனது நடுவிரலை காட்டி டிரம்பை அசிங்கப்படுத்தினார்.

வைரலானது

வைரலானது

இது செய்தியாளர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் உலகம் முழுக்க வெளியாகி பெரிய வைரலானது. அட அமெரிக்க அதிபரையே ஒரு நொடியில் இந்த பெண் அவமன்படுத்திவிட்டாரே என்று பலர் இதை பற்றி டிவிட் செய்தனர்.

வேலை போனது

வேலை போனது

அப்போது ஜூலி பிரிஸ்க்மேன் அமெரிக்க அரசின் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். இந்த விஷயம் வைரலானதை அடுத்து ஜூலி பிரிஸ்க்மேன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலி பிரிஸ்க்மேன் உடனே பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

வெற்றி பெற்றார்

வெற்றி பெற்றார்

அதே சமயம் ஜூலி பிரிஸ்க்மேனுக்கு அமெரிக்காவில் சமூக போராளிகள் பலர் ஆதரவு அளித்தனர். மக்கள் மத்தியில் மிக வேகமாக இவர் புகழ்பெற்றார். இந்த நிலையில் விர்ஜினியாவில் லவுடன் கவுண்டி போர்ட் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசு கட்சியை எதிர்த்து ஜூலி பிரிஸ்க்மேன் போட்டியிட்டார்.

பெற்றார்

இந்த தேர்தலில் தொடக்கத்தில் இருந்தே ஜூலி பிரிஸ்க்மேனுக்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு இருந்தது. இந்த நிலையில் இன்று ஜூலி பிரிஸ்க்மேன் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். தனக்கு ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் நன்றி என்று ஜூலி பிரிஸ்க்மேன் தெரிவித்துள்ளார்.

English summary
The woman who flipped off the middle finger to POTUS Trump wins a US Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X