நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரம்.. ஊழியர்கள் உருக்கம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகின் மிகப்பெரிய விமானமான ஸ்டிராட்டேலான்ச் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலன் உலகின் மிகப்பெரிய விமானமாக ஸ்டிராட்டோலான்ச் விமானத்தை உருவாக்க வேண்டும் என்று 2011ம் ஆண்டு திட்டமிட்டார். அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது கனவு 8 ஆண்டுகளுக்கு பின் நேற்று நினைவாகி உள்ளது.

மறைந்த பால் ஆலனின் கனவுத்திட்டமான ஸ்டிராட்டோலான்ச் விமானத்தின் சோதனை ஓட்டம், கலிபோர்னியாவில் சனிக்கிழமை காலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

துஜே தேக்கா தோ யே ஜானா சனம்.. ஸ்ரீநகர் துலிப் தோட்டத்துக்குப் போய் ஆடிப் பாடலாமா! Video துஜே தேக்கா தோ யே ஜானா சனம்.. ஸ்ரீநகர் துலிப் தோட்டத்துக்குப் போய் ஆடிப் பாடலாமா! Video

26 சக்கரங்கள்

26 சக்கரங்கள்

இந்த ஸ்டிராட்டோலான்ச் விமானத்தின் இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடியாகும். பார்ப்பதற்கு இரண்டு பெரிய விமானங்கள் போல் காட்சி அளிக்கும் இந்த விமானம் 6 இன்ஜின்கள் மற்றும் 28 சக்கரங்களுடனும், 5 லட்சம் பவுண்ட் எடையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டிராட்டோலான்ச்

ஸ்டிராட்டோலான்ச்

கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட நீளமாக இருக்கும் இந்த ஸ்டிராட்டோலான்ச் விமானம் தான் உலகின் மிகப்பெரிய விமானம் ஆகும். இந்த விமானம் பறக்கும் போதே ஏவுகணைகளை விண்ணில் ஏவும் திறன் படைத்தவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

பறந்தபடி ராக்கெட்

பறந்தபடி ராக்கெட்

இந்த விமானத்தின் மூலம் ஏவுகணைகளை வானத்தில் வைத்த ஏவினால், பூமியில் ஏவுவதை விட அதிக அளவிலான எரிபொருளை மிச்சப்படுத்த முடியும். இன்று விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்ட போதிலும், ஏவுகணைகள் ஏதுவும் விண்ணில் செலுத்தப்படவில்லை. இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் பிகாசஸ் எக்சல் என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவ ஒப்பந்தம் போட்டுள்ளது.

உருக்கத்தில் ஊழியர்கள்

கலிபோர்னியாவின் மோஜாவா விண்கல ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10 அளவில் விண்ணில் ஏவப்பட்ட இந்த விமானம், இரண்டு மணி நேரம் தொடர்ந்து பறந்தது. 15 ஆயிரம்உயரத்தில் பறந்த விமானத்தை, அதிகாரிகள் கீழ் இருந்து பார்த்து மெய்சிலிர்த்தனர். பலதடைகளை கடந்து தங்கள் கனவு நிறைவேறியதை எண்ணி அந்த விமானத்தை உருவாக்கிய 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

English summary
The World’s biggest airplane Stratolaunch took flight for the first time ever on Saturday morning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X