நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐ.நா. சபைபில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

    நியூயார்க்: உலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார்.

    பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இன்று (வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த கவுரவம். ஏனெனில் இநத் ஆண்டு தான் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை உலகம் கொண்டாடுகிறது.

    இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய தேர்தல் நடந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் என் அரசாங்கம் இரண்டாவது முறையாக அதிகாரத்திற்கு வருவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் மீண்டும் நான் உங்கள் முன் இங்கு நிற்கிறேன்.

    தூய்மை இந்தியா

    தூய்மை இந்தியா

    வளரும் நாடான இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதாரத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போல் உலகம் முழுவதும் தூய்மை திட்டத்தை கொண்டு வரவேண்டும்

    50 கோடி மக்கள்

    50 கோடி மக்கள்

    வளரும் நாடான இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. 500 மில்லியன் மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 5லட்சம் ரூபாயை இலவச சிகிச்சைக்காக வழங்குகிறது. இந்த திட்டத்தின் விளைவுகள் உலகிற்கு ஒரு புதிய வழியை காட்டுகிறது.

    ஏழைகளுக்கு வங்கி கணக்கு

    ஏழைகளுக்கு வங்கி கணக்கு

    இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நிதி சேர்க்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. வெறும் 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 37 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை இந்தியா திறக்கிறது, இந்த திட்டம் உலகம் முழுவதும் ஏழைகள் மீது நம்பிக்கையை வளர்க்கின்றது.

    பயோமெட்ரிக் அடையாளம்

    பயோமெட்ரிக் அடையாளம்

    இந்தியா அதன் குடிமக்களுக்காக, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாளத் திட்டத்தைத் தொடங்கி, அவர்களுக்கு ஒரு பயோமெட்ரிக் அடையாளத்தை அளித்து, அதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெற முடியும் என்பதை உறுதிசெய்துள்ளது. ஊழலுக்கு முடிவுகட்டுவதன் மூலம் 20 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையைச் சேமிக்கிறது, இதன் விளைவு உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருக்கும்.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு

    நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில், ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்றுதவற்கான மிகப்பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீர் பாதுகாப்பு

    நீர் பாதுகாப்பு

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நீர் பாதுகாப்பை ஊக்குவிப்பதுடன், 15 கோடி வீடுகளுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்ய போகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் , 125,000 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய சாலைகளை உருவாக்க உள்ளோம். 2022 ஆம் ஆண்டில், இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, ஏழைகளுக்காக 20 கோடி வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளோம்.

    ஓரணியில் நிற்போம்

    ஓரணியில் நிற்போம்

    எந்தவொரு நாட்டிற்கும் அல்ல, ஆனால் முழு உலகத்துக்கும் மனிதகுலத்துக்கும் இது மிகப்பெரிய சவால்களில் ஒன்று தீவிரவாதம் என்று நாங்கள் நம்புகிறோம். உலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று பட வேண்டும்" என்றார்.

    English summary
    PM Modi on UNGA: The world should stand as one against terrorism
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X