நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்கூரையில் நடக்கும் சத்தம்.. காணாமல் போகும் மதுபாட்டில்கள்.. அமெரிக்க போலீசாரை குழப்பும் திருடன்!

அமெரிக்காவில் பல நாட்களாக ஒரு மளிகைக்கடையில் தங்கியிருக்கும் திருடன், அங்குள்ள சிகரெட் மற்றும் மதுபானங்களை திருடி வருகிறான்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் பல நாட்களாக ஒரு மளிகைக்கடையின் மாடியில் தங்கியிருக்கும் திருடன், அங்குள்ள சிகரெட் மற்றும் மதுபானங்களை திருடி வருகிறான். ஆனால் அவனை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இருக்கிறது ஆபர்ன் நகரம். அங்குள்ள ஓரு சூப்பர் மார்க்கெட்டில் பல நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பல ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிகரெட் மற்றும் மதுபானங்கள் திருடப்பட்டு வருகிறது.

thief stole thousands of dollars worth of cigarettes and liquor from a grocery store

இரவு நேரத்தில் கடைக்குள் வந்து திருடும் மர்ம நபரின் உருவங்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதை போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டு திருடனை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

கடையின் மேற்கூரையில் அடிக்கடி யாரோ நடப்பது போன்ற சத்தம் கேட்பதாக ஊழியர் அளித்த தகவலின்படி போலீசார், அங்கு தேடினர். மோப்ப நாய்கள், அதிநவீன சென்சார் கருவிகளை வைத்து தேடியும் கூட போலீசாரால் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வரும் அந்த பலே திருடன் யாராக இருக்கும் என அமெரிக்கா முழுவதும் பேச்சாக இருக்கிறது.

எலும்புக்கூடுக்கு டிரஸ் போட்டு.. அபராதத்தில் இருந்து தப்பிக்க தாத்தா செய்த தில்லாலங்கடி.!எலும்புக்கூடுக்கு டிரஸ் போட்டு.. அபராதத்தில் இருந்து தப்பிக்க தாத்தா செய்த தில்லாலங்கடி.!

English summary
The American Police is struggling to find a theif, who is living in the grocery store ceiling and continous to steal cigarette and liquor worth thousands of dollars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X