நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா? ஆதாரத்துடன் நிரூபிக்கும் டிரம்ப்.. பென்டகன் வெளியிட்ட வீடியோ!

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டது எப்படி என்று அமெரிக்காவின் பென்டகன் வீடியோ வெளியிட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா?.. பரபரப்பு வீடியோ

    நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டது எப்படி என்று அமெரிக்காவின் பென்டகன் வீடியோ வெளியிட்டு உள்ளது.

    ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி கொலை செய்யப்பட சம்பவம்தான் உலக அரங்கில் தற்போது முக்கிய செய்தியாக இருந்து வருகிறது. சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார். டிரம்ப் வெள்ளை மாளிகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    கோவை உட்பட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனைகோவை உட்பட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    அல் பக்தாதி பல வருடங்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தது. ரஷ்யா இவரை கொன்றதாக அறிவித்தது. அதன்பின் சிரியாவும், துருக்கியும், குர்தீஸ் போர் படைகளும் இவரை கொலை செய்ததாக கூறியது. தற்போது நானும் ரவுடிதான் என்று கூடி டிரம்பும் அல் பக்தாதியை கொன்றதாக அறிவித்துள்ளார்.

    செத்து செத்து விளையாடுவோம்

    செத்து செத்து விளையாடுவோம்

    பல வருடங்களாக உலக அரசியலில் இப்படித்தான் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி செத்து செத்து விளையாடிக்கொண்டு இருக்கிறார். உலகம் தன்னை கொடூரமான வில்லனாக டிவியில் காட்டும் என்று நினைத்தவருக்கு, தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகும் என்று கண்டிப்பாக தெரிந்திருக்காது. இப்போதும் கூட அல் பக்தாதி பலியாகவில்லை என்றுதான் ரஷ்யா கூறி வருகிறது.

    என்ன பொய்

    என்ன பொய்

    ஆம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார். இதை நம்ப வேண்டாம் என்று என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அல் பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்ய பென்டகன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அல் பக்தாதி இருந்ததாக கூறப்படும் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் வீடியோ ஆகும்.

    வடமேற்கு மாநிலம்

    சிரியாவின் வடமேற்கு மாநிலத்தில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. உயரமான சுவர் வைத்த கட்டிடம் ஒன்றில்தான் அல் பக்தாதி இருந்துள்ளார். சிஐஏ கொடுத்த தகவலின் அடிப்படையில் உள்ளே ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் குதித்த அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் அல் பக்தாதி தன்னுடைய உடலில் வைத்திருந்த வெடிகுண்டை செயல்பட செய்து பலியாகி உள்ளான்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இந்த வீடியோவை தற்போது பென்டகன் வெளியிட்டுள்ளது. இதில் 8+ ராணுவ வீரர்கள் பக்தாதி வீட்டிற்குள் தாக்குதல் நடத்த செல்வது பதிவாகி உள்ளது. அதேபோல் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும் இதில் பதிவாகி உள்ளது.

    பலி எண்ணிக்கை

    அதேபோல் இந்த தாக்குதலில் 4 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் இன்னொரு ஆண் கொல்லப்பட்டுள்ளார். 3 குழந்தைகள் பலியானதாக டிரம்ப் கூறினார். ஆனால் மொத்தமாக 2 குழந்தைகள்தான் வெடிகுண்டு வெடித்த போது பலியாக்கினார்கள் என்று பென்டகன் விளக்கம் அளித்துள்ளது.

    காணவில்லை

    அதேபோல் இவர்கள் இருந் மொத்த காம்பவுண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் தற்போது பென்டகன் வெளியிட்டு இருக்கிறது. அல் பக்தாதியை டிஎன்ஏ மூலம் உறுதிப்படுத்திவிட்டே அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். வரும் வழியில் அல் பக்தாதி உடலை கடலில் போட்டுள்ளனர்.

    English summary
    This is How US forces killed ISIS chief: Pentagon Releases Video in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X