நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைமாறும் நிறுவனம்?.. டிக்டாக் செயலியில் நினைத்து பார்க்க முடியாத டிவிஸ்ட்.. பின்னணியில் அமெரிக்கா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: டிக்டாக் நிறுவனம் மொத்தமாக அதன் நிறுவனர் ஷாங் யிமிங் கையை விட்டு போகும் நிலையை எட்டி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் முக்கியமான போர்ட் உறுப்பினர்களே தற்போது டிக்டாக் நிறுவனத்திற்கு எதிராக களமிறங்கி இருக்கிறார்கள்.

Recommended Video

    TikTok தலைமை அலுவலகத்தை சீனாவில் இருந்து மாற்ற முடிவு?

    கடந்த சில வாரங்கள் முன் இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டது. சீனாவுடன் நிலவிய மோதல் காரணமாக இந்தியாவில் மொத்தமாக டிக்டாக் உட்பட 59 செயலிகள் தடை செய்யப்பட்டது. இதனால் டிக்டாக் செயலிக்கு பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டது.

    இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை கொண்டு வர அந்த நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

    ஹூஸ்டன் தூதரகத்தை மூடியதற்கு பதிலடி- செங்டு அமெரிக்கா தூதரகத்தை மூட சீனா உத்தரவுஹூஸ்டன் தூதரகத்தை மூடியதற்கு பதிலடி- செங்டு அமெரிக்கா தூதரகத்தை மூட சீனா உத்தரவு

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    டிக்டாக் பயனாளர்களின் தகவல்களை திருடுகிறது. அதை சீனாவின் அரசுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது. மக்களின் ரகசிய விவரங்கள், தகவல்கள் திருடப்படுகிறது என்று கூறப்பட்டது. தகவல் திருட்டு உலகின் பெரிய பிரச்சனையாகும். இதனால் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டது.

    அமெரிக்கா எப்படி

    அமெரிக்கா எப்படி

    இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது. இதற்கு மூன்று விதமான காரணங்கள் சொல்லப்பட்டது.

    1. தகவல் திருட்டு

    2.அமெரிக்க மக்களின் தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்தது.

    3. அமெரிக்க அதிபருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை திட்டமிட்டு நடத்தியது என்று புகார் வைக்கப்பட்டது,

    தடைக்கு பிளான்

    தடைக்கு பிளான்

    இதனால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக விரைவில் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள். அந்நாட்டு அதிபர் டிரம்ப் இந்த செயலியை தடை செய்ய தீவிரம் காட்டி வருகிறார். சீனா மீது இருக்கும் கோபத்தை டிக்டாக் மீது காட்ட அவர் திட்டமிட்டு வருகிறார்.

    விற்க சொன்னார்கள்

    விற்க சொன்னார்கள்

    இதற்கு தீர்வாக டிக்டாக் நிறுவனர் ஷாங் யிமிங்கின் பங்குகளை அவர் விற்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்தமாக உங்கள் பங்குகளை 90% விற்றுவிடுங்கள். அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்றுவிடுங்கள். அமெரிக்கர் இதை நடத்தட்டும். அமெரிக்காவிற்கு இந்த நிறுவன தலைமையகத்தை மாற்றுவோம்.

    அமெரிக்க நிறுவனம் போல

    அமெரிக்க நிறுவனம் போல

    அப்படி அமெரிக்காவிற்கு நிறுவனத்தை மாற்றினால்தான் உலக நாடுகள் நம்மை நம்பும். அமெரிக்க நிறுவனம் போல இதை மாற்ற வேண்டும். சீனாவில் இருந்து மொத்தமாக டிக்டாக் நிறுவனத்தை நாம் வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஷாங் யிமிங் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார். அந்த நிறுவனமே தற்போது கைமாறும் நிலைக்கு சென்றுள்ளது.

    எதிர்ப்பு தெரிவித்தார்

    எதிர்ப்பு தெரிவித்தார்

    ஆனால் இதற்கு அந்த செயலியின் நிறுவனர் ஷாங் யிமிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்னால் பங்குகளை விற்க முடியாது. மைனாரிட்டி ஷேர் ஹோல்டர் போல மாறினால் நிறுவனம் கையைவிட்டு போகும். வேறு யாராவது என்னுடைய நிறுவனத்தை மொத்தமாக கையகப்படுத்திவிடுவார்கள். நான் இதை எதிர்கொண்டு, மீண்டும் டிக்டாக் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வர போகிறேன், என்று ஷாங் யிமிங் தெரிவித்துள்ளார்.

    English summary
    TikTok board members are pressing the founder to sell his share to the US companies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X