நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்கள் நிறுவனத்தை உடைக்கும் நேரம் வந்துவிட்டது.. அமேசானுக்கு எலோன் மஸ்க் பகிரங்க எச்சரிக்கை.. பகீர்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமேசான் நிறுவனத்தை உடைக்கும் நேரம் வந்துவிட்டது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Amazon-ஐ உடைக்கும் நேரம் வந்துவிட்டது... Elon musk எச்சரிக்கை

    அமெரிக்காவின் இரண்டு பெரிய பணக்காரர்கள் என்று பார்த்தால் ஒருவர் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க். இன்னொருவர் உலகின் நம்பர் 1 பணக்காரர் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ். இவர்களுக்கு இடையே பல்வேறு விஷயங்களில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    முக்கியமாக விண்வெளி துறையில் ஜெப் பெஸோசுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் , எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் கடுமையாக போட்டி போட்டு வருகிறது.

    மதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்? பின்னணி! மதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்? பின்னணி!

    கடும் போட்டி

    கடும் போட்டி

    யார் முதலில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது என்ற போட்டி கடுமையாக இவர்கள் இடையே நிலவி வருகிறது. இந்த போட்டி தற்போது சண்டையாக மாற தொடங்கி உள்ளது. அமேசான் நிறுவனத்தை வெளிப்படையாக டிவிட்டரில் எதிர்க்கும் நிலைக்கு எலோன் மஸ்க் வந்து இருக்கிறார். அமேசான் நிறுவனத்தை மொத்தமாக உடைக்க வேண்டும் என்று எலோன் மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார்.

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    நேற்று அலெக்ஸ் பிரென்சன் என்ற அமெரிக்க செய்தியாளர் ஒருவர் அமேசான் நிறுவனம் குறித்து டிவிட் செய்து இருந்தார். அதில் அமேசான் கிண்டில் (புத்தகம் பதிவேற்றும், படிக்கும், தரவிறக்கம் செய்யும் தளம்) தளத்தில் இருந்து என்னுடைய புத்தகத்தை அமேசான் நிறுவனம் நீக்கிவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். Unreported Truths about Covid-19 and Lockdowns: Part 1: Introduction and Death Counts and Estimates என்று பெயரில் அவர் கொரோனா குறித்த புத்தகத்தை எழுதி இருந்தார்.

    மொத்தமாக நீக்கியது

    விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்று கூறி அந்த கொரோனா குறித்த அலெக்ஸ் பிரென்சன் புத்தகத்தை அமேசான் நிறுவனம் கிண்டில் தளத்தில் இருந்து இருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலெக்ஸ் பிரென்சன் தற்போது டிவிட்டரில் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதுதான் எலோன் மஸ்க்கை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    எலோன் மஸ்க் என்ன சொன்னார்

    இதை பார்த்ததும் கோபம் அடைந்த எலோன் மஸ்க், இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சந்தையில் இப்படி தன்னிசையாக அமேசான் செயல்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது. அமேசான் நிறுவனத்தை உடைக்கும் நேரம் வந்துவிட்டது, என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது அமேசானின் கொட்டத்தை அடக்கும் வகையில் அந்த நிறுவனத்தை உடைக்க வேண்டும் என்று எலோன் மஸ்க் குறிப்பிட்டு உள்ளார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    வேறு ஒரு நிறுவனத்தை உடைக்கும் அளவிற்கு எல்லாம் எலோன் மஸ்க்க்கு அதிகாரம் இல்லை. அதேபோல் அமேசானை உடைக்கும் அளவிற்கும் அவரிடம் பணம் இல்லை. ஆனால் அவரின் கோபம் நியாயமானது என்று மக்கள் கூற தொடங்கி உள்ளனர். அமேசான் நிறுவனம் போல எலோன் மஸ்க் ஒரு நிறுவனம் தொடங்க வேண்டுமே என்று மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர் .

    சிக்கல் மேல் சிக்கல்

    சிக்கல் மேல் சிக்கல்

    ஏற்கனவே எலோன் மஸ்க் டிவிட்டரில் இருந்து சில நாட்கள் பிரேக் எடுக்க போகிறேன் என்று அறிவித்து இருந்தார். டிவிட்டரில் அவர் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்தார். இதனால் பல கோடிகளை பங்கு சந்தையில் இழந்தார். இந்த நிலையில் டிவிட்டரை விட்டு செல்வதாக அறிவித்துள்ளார். எலோன் மஸ்க் கோரிக்கையை தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய புத்தகம் மீதான தடையை அமேசான் நீக்கியுள்ளது.

    English summary
    Time to break you up: SpaceX Elon Musk warns Amazon for it monopoly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X